
Cinema News
எங்க அப்பாகிட்ட அப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கு… ஸ்ருதிஹாசனே இப்படி சொல்லிட்டாங்களே…
Published on
By
Kamalhassan: நடிகையும் கமல்ஹாசனின் மகளும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பாவிற்கு இந்த பழக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை ரசிகர்களிடம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் எல்லா நடிகர்களும் தியேட்டரில் படத்தை வெளியிட பயந்து வந்தனர்.
இதையும் படிங்க: கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.
ஆனால் கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பில் நடித்து உருவான விக்ரம் திரைப்படத்தை தைரியமாக திரையரங்குகளில் வெளியிட்டார். பல வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக்லைஃப் திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சண்டை இயக்குனர் அன்பறிவு படம் உள்ளிட்ட பல படங்களை தன்னுடைய கைவசம் வைத்திருக்கிறார்.
நடிப்பில் கொடிகட்டி பறந்து வரும் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் மூலம் சிறப்பான படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் ஒரு மாதத்தை கடந்தும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர் இப்படி சொல்லிட்டாரு!..
சினிமாவில் தான் சம்பாதித்த திரைப்படத்தை சினிமாவிலேயே போடுவது கமல்ஹாசனின் வழக்கம். இப்படி கறாரான நடிகராக இருக்கும் கமல்ஹாசனிடம் ஒரு குழந்தைத்தனமான பழக்கமும் இருப்பதாக அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். என்னுடைய அப்பாவிற்கு எமோஜி மட்டுமே அனுப்பும் பழக்கம் இருக்கிறது.
அதிலும் யாருமே பயன்படுத்தாத சுருள், ஏலியன் உள்ளிட்ட வித்தியாசமான எமோஜிகளை தான் அதிகம் அனுப்பி குழப்பி விடுவார். அது மட்டுமல்லாமல் அவர் என்னதான் நடிகராக இருந்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்த அப்பா என்பதால் நேரடியாக ஐ லவ் யூ என்பதை சொல்ல மாட்டார் வெட்கப்படும் எமோஜியை அனுப்பினால் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சிரித்துக் கொண்டே சுருதிஹாசன் தெரிவித்தார்.
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...