Connect with us
soori

latest news

Viduthalai 2: இளையராஜா மீது கோபமா? சூரியே போன் பண்ணி சொன்னாரு.. விடுதலை 2 பட விழாவில் நடந்த களேபரம்

Viduthalai 2: சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரை துறையினர் பலரும் கலந்து கொள்ள இளையராஜாவும் அந்த விழாவிற்கு வந்திருந்தார்.விடுதலை படத்திற்கு இசை இளையராஜா. அதனுடைய இரண்டாம் பாகத்தில் தினம் தினம் என்ற பாடல் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறனின் நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். ஒரு சிறந்த படைப்பாளியும் கூட. அவர் அன்று அப்படி நடந்து கொண்டது அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

யாரோ ஒரு பெயரை கூற மறுக்க மேடையில் இருந்த ஒருவர் அந்தப் பெயரை சொல்லும் படி கூற அதற்கு வெற்றிமாறன் நான் மொத்த டீமையும் தானடா சொல்றேன் என சொல்லி அதை அப்படியே சமாளித்து இருக்கலாம். ஆனால் கீழே இருந்தவர் ஏதோ பெரிய கெட்ட வார்த்தை சொன்னதைப் போலவும் அதை சகித்துக் கொள்ள முடியாமல் வெற்றிமாறன் மிகவும் கோபத்துடன் மைக்கை கீழே தூக்கிப் போட்டுவிட்டு முகத்தையும் ஒரு மாதிரியாக வைத்து விட்டு சட்டென போய் உட்கார்ந்து விட்டார்.

இதையும் படிங்க: ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய டாப் 25 திரைப்படங்கள்!.. மறக்க முடியாத ‘வைதேகி காத்திருந்தாள்’….

அப்படி அந்தப் பெயரை சொன்னால் தான் என்ன என்றுதான் அனைவரும் இப்போது கேள்வி கேட்கின்றனர். அது மட்டுமல்ல படத்தின் ஹீரோயின் மஞ்சுவாரியர் பெயரை கூட வெற்றிமாறன் சொல்லவில்லை. இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒரு படைப்பாளி இருக்கிறார் என்றால் அவருடைய படைப்பை மட்டுமே நாம் ரசிக்க வேண்டும்.

சிறந்த படைப்பாளியா என்பதை நாம் ரசிக்க கூடாது .சிறந்த படைப்பாளியாக இருக்கிறார் என நாம் சொன்னால் அவருக்கு ஒரு ரசிகனாக மட்டும் தான் நம்மால் இருக்க முடியும். அப்படித்தான் வெற்றிமாறன் விஷயத்திலையும் நான் சொல்கிறேன் .அவரைப் பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் .அதனால் அவர் அன்று மேடையில் அப்படி நடந்தது எனக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

ஏனெனில் அடிப்படையிலேயே அவர் அப்படித்தான். உலகமே வியக்கும் இளையராஜா இருக்கும் அந்த மேடையில் வெற்றிமாறன் அப்படி நடந்து கொண்டது தவறுதான். ஒரு வேளை இளையராஜாவுக்காக கூட வெற்றிமாறன் அப்படி செய்திருக்கலாம். இளையராஜாவைப் பொறுத்த வரைக்கும் எந்த ஒரு பெரிய இயக்குனராக இருந்தாலும் சரி தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் தனக்கு அடிமைதான் என எண்ணுபவர்.

அதைப்போல தான் வெற்றிமாறனையும் இளையராஜா நடத்தியிருக்கக்கூடும். அதை நேரடியாக காட்ட முடியாமல் எனக்கும் கோபம் வரும் என்ற வகையில் கூட அன்று மேடையில் வெற்றிமாறன் அப்படி நடந்திருக்கலாம் என பிஸ்மி கூறினார். மேலும் இளையராஜாவும் சூரியை அழைத்து உனக்கு கை தட்டுறானுங்க. எனக்கு தட்டல. நீ கூட்டிட்டு வந்த ஆளுங்க அப்படி என்ற வகையில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: விஜயும், பார்த்திபனும்தான் இந்த நிலைக்கு காரணமா? புலம்பும் தயாரிப்பாளர்…!

இதைப்பற்றியும் பிஸ்மி கூறும் போது விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழாவில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அப்போது சூரியே எனக்கு போன் செய்து  ‘அண்ணே என் சொந்த செலவை போட்டு என் சொந்தக்காரங்களை கூட்டிட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் எனக்கு கைதட்டினாங்க’ எனக் கூறினார். அதை நம் வலைப்பேச்சியி நானே சொல்லி இருக்கிறேன்.

ஆனால் அதே சூரி இன்னொரு மேடையில் பேசும்போது  ‘நான் என்னுடைய சொந்த காசை போட்டு கூட்டிட்டு வந்திருக்கிறேன்.பஸ்ல வராம பறந்தா வருவாங்க என்ற வகையில் கோபமாக பேசியிருந்தார். அது நாங்கள் விமர்சனம் செய்து விட்டோம் என்ற கோபத்தில் எங்களுக்காக சூரி அந்த மேடையில் பேசினார். ஆனால் அது இளையராஜாவின் மீது இருந்த கோபம் தான் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top