ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய டாப் 25 திரைப்படங்கள்!.. மறக்க முடியாத ‘வைதேகி காத்திருந்தாள்’....

by sankaran v |   ( Updated:2024-11-30 12:33:00  )
R Sundararajan
X

R Sundararajan

ஆர்.சுந்தரராஜனை காமெடி நடிகராகத் தான் நமக்குத் தெரியும். ஆனால் 90களில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ஆர்.சுந்தரராஜன். அவர் இயக்கியது 25 படங்கள். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்போது ஆர்.சுந்தரராஜன் இயக்கிய ஹிட் படங்களைப் பார்ப்போம்.

ஒயிலாட்டம்

2013ல் வந்த படம் நிலாச்சோறு. அவரது கடைசி படம். அவரது மகனை அறிமுகப்படுத்தி எடுத்தார். ஆனால் படம் பெரிய அளவில் போகவில்லை. இதுல சாரா என்ற பிரபல குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளார். அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை என்ற இது சுந்தராஜனின் இரண்டாவது படம். இது பிளாப். 91ல் வெளியான ஒயிலாட்டம் படம் பிளாப்.

சாமி போட்ட முடிச்சு

86ல் விஜயகாந்த் நடித்த தழுவாத கைகள் படம். இதுவும் பிளாப் தான். 91ல் வெளியான முரளி நடித்த படம் சாமி போட்ட முடிச்சு. இதுவும் சுமார் ரகம் தான். 97ல் வெளியான விஜய் நடித்த படம் காலமெல்லாம் காத்திருப்பேன். இதுவும் பெரிய அளவில் எடுபடவில்லை. 88ல் வெளியான கார்த்திக் நடித்த படம் என் ஜீவன் பாடுது. சரண்யா ஜோடி. இளையராஜா மியூசிக். இது பிளாப் தான்.

காந்தி பிறந்த மண்

Also read: அஜீத்தின் சம்பளத்தை தாண்டிய அட்லீ!.. அடுத்த படத்துக்கு இவ்வளவு கோடியா?!….

விஜயகாந்த், ரேவதி நடித்த படம் காந்தி பிறந்த மண். இது ரொம்ப சொதப்பலான படம். விஜயகாந்த் ரசிகர்களுக்குப் பிடித்த படம். 96ல் வெளியான பிரபு நடித்த படம் சீதனம். சங்கீதா ஜோடி. இதுல காமெடி சூப்பர். படம் சிறப்பு.

சுயம்வரம்

90ல் வெளியான விஜயகாந்த், ஷோபனா நடித்த படம் எங்கிட்ட மோதாதே. இளையராஜா மியூசிக். சூப்பர்ஹிட். 88ல் வெளியான விஜயகாந்த் படம் காலையும் நீயே, மாலையும் நீயே. இது 100 நாள் ஒடிய படம். நல்ல கதை அம்சம் உள்ள படம். சுயம்வரம் படத்தில் பல இயக்குனர்களில் ஆர்.சுந்தரராஜனும் ஒருவர். இது சுமார் ரகம்.

85ல் வெளியான சிவகுமார் நடித்த படம் சுகமான ராகங்கள். சரிதா, ஜீவிதாவும் நடித்தனர். இது சுமார் ரகம். 83ல் வெளியான படம் மோகன் நடிப்பில் வெளியான தூங்காத கண்ணென்று ஒன்று. அம்பிகா ஜோடி. நல்ல வெற்றி பெற்ற படம்.

திருமதி பழனிச்சாமி

Thirumathi palanisamy

Thirumathi palanisamy

90ல் பார்த்திபன் நடிப்பில் வெளியான படம் தாலாட்டு பாட வா. குஷ்பூ ஜோடி. படம் நல்ல வெற்றி பெற்றது. 92ல் வெளியான படம் திருமதி பழனிச்சாமி. சத்யராஜ், சுகன்யா நடிப்பில் சக்கை போடு போட்டது. 83ல் மோகன், நளினி நடிப்பில் வெளியான படம் சரணாலயம். இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடியது. மோகன், ஆர்.சுந்தரராஜன் கூட்டணி என்றாலே வெற்றி தான்.

82ல் மோகன், ரேவதி நடித்த படம் குங்குமச்சிமிழ். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. படம் மாஸ் ஹிட். 84ல் சிவகுமார், அம்பிகா நடித்த நான் பாடும் பாடல் சூப்பர்ஹிட். படம் சூப்பராக இருந்தது. இதுவும் வெள்ளி விழா தான்.

என் ஆசை மச்சான்

94ல் விஜயகாந்த், ரேவதி நடித்த படம் என் ஆசை மச்சான். இது நல்ல வெற்றி அடைந்த படம். முரளியும் படத்தில் நடித்துள்ளார். 86ல் வெளியான படம் மெல்லத் திறந்தது கதவு. மோகன், ராதா, அமலா நடித்த படம். சூப்பர்ஹிட் அடித்தது. எம்எஸ்வி, இளையராஜா மியூசிக். இது முக்கோண காதல் கதை. பாடல்கள் மாஸ். 200 நாள் ஓடியது.

பயணங்கள் முடிவதில்லை.

86ல் விஜயகாந்த், ராதா நடிப்பில் வெளியான படம் அம்மன் கோவில் கிழக்காலே. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.82ல் மோகன், பூர்ணிமா நடித்த படம் பயணங்கள் முடிவதில்லை. இது சுந்தரராஜனுக்கு முதல் படம். சூப்பர் டூப்பர்ஹிட். பாடல்கள் சூப்பர் ரகங்கள்.

வைதேகி காத்திருந்தாள் - ராஜாதி ராஜா

RR VK

RR VK

84ல் வெளியான விஜயகாந்த், ரேவதி நடித்த படம் வைதேகி காத்திருந்தாள். இது வேற லெவல் ஹிட் கொடுத்தது. காமெடியும் சூப்பராக இருந்தது. முதல் இடத்தில் 85ல் ரஜினிகாந்த், ராதா நடிப்பில் வெளியான படம் ராஜாதி ராஜா இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட். இது நல்ல வசூல். படமும் பிளாக் பஸ்டர் ஹிட். 200 நாள்கள் ஓடியது.

Next Story