அஜீத்தின் சம்பளத்தை தாண்டிய அட்லீ!.. அடுத்த படத்துக்கு இவ்வளவு கோடியா?!....
பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷங்கரிடம் உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர்தான் இந்த அட்லீ. துவக்கத்தில் குறும்படம் எடுத்து வந்தார். ஷங்கரிடம் எந்திரன், நண்பன் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார்.
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்பு வர தெறி படம் உருவானது. விஜயை எப்படி காட்டினால் அவரின் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அது கச்சிதமாக அட்லிக்கு கை வந்தது. அதன்பின் விஜயை வைத்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல நான் கமல் சாரை விட பெஸ்ட்!.. இப்படி சொல்லிட்டாரே மிர்ச்சி சிவா!..
தமிழில் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடிக்கும் படங்களின் கதையை பட்டி டிங்கரிம் செய்து அதை ஒரு புதிய படம் போல எடுப்பது அட்லியின் வழக்கம். இது தொடர்பாக அவரை பல வருடங்களாகவே ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து வந்தாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை.
யார் என்ன சொன்னாலும், நெகட்டிவாக பேசினாலும் என் கனவை நோக்கி நீ போய்க்கொண்டிருப்பேன் என தத்துவமாக பதில் சொல்வார். பிகில் படத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் ஷாருக்கானின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
எனவே, இந்தியாவில் பெரிய இயக்குனராக அட்லி மாறியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அடுத்தும் ஒரு ஹிந்தி படத்தை அட்லி இயக்க சல்மான்கான் அதில் நடிக்கவுள்ளார். அதில் மற்றொரு வேடத்தில் நடிக்க கமலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை அட்லீ, சன் பிக்சர்ஸ் மற்றும் சல்மான்கான் என மூவரும் இணைந்து தயாரிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை சம்பளம் மட்டுமே வாங்கி வந்த அட்லி இனிமேல் சம்பளதோடு லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என கேட்க துவங்கிவிட்டார். அப்படி பார்க்கும் போது அடுத்து இயக்கும் படத்திற்கு 100 கோடிக்கும் மேல் அவருக்கு சம்பளம் வரும் என சொல்லப்படுகிறது.
போகிற போக்கை பார்த்தால் அஜித்தின் சம்பளத்தை அட்லீ தாண்டி விடுவார் போல!...
இதையும் படிங்க: பாலிவுட் என்ட்ரி!.. மும்பை புரமோஷனில் ஓபனாக பேசிய அல்லு அர்ஜுன்.. அப்படி என்ன சொன்னாரு?..