அந்த விஷயத்துல நான் கமல் சாரை விட பெஸ்ட்!.. இப்படி சொல்லிட்டாரே மிர்ச்சி சிவா!..
Mirchi Siva: சென்னையில் உள்ள ரேடியோ மிர்ச்சி சேனலில் ஆங்கராக வேலை செய்தவர் சிவா. எனவே, மிர்ச்சி சிவா என்கிற பெயர் வந்துவிட்டது. இரவு 10 மணி முதல் 2 மணி வரை காதல் டாக்டர் என்கிற பெயரில் காதல் பிரச்சனை தொடர்பாக சந்தேகம் கேட்கும் ரசிகர்களுக்கு ஆலோசனை சொல்லி வந்தார்.
வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான சென்னை 28 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு மட்டுமே ஒரு டூயட பாடல் இருந்தது. அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருக்கிறார். கலகலப்பு மற்றும் கலகலப்பு 2-வில் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இதையும் படிங்க: என்கூட வந்த SK. பெரிய ஆளாயிட்டாரு… நான் அப்படியே இருக்கேன்… குமுறும் நடிகர்
தமிழ் சினிமாவில் காலம் காலமாக இடம் பெற்றிருந்த கிரின்ச் காட்சிகளை கிண்டலடித்து எடுக்கப்பட்ட 'தமிழ் சினிமா' படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை திரையுலகினரே ரசித்தார்கள். தொடர்ந்து தமிழ் படம் 2-வும் வெளியாகி ஹிட் அடித்தது. அந்த படத்தில் பரத நாட்டியமெல்லாம் ஆடியிருப்பார்.
அதாவது வில்லனாக வரும் சதீஷுக்கு போட்டியாக சிவா நடனம் ஆடுவார். தமிழ் சினிமா படத்தில் அகில உலக சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டது. எனவே, எங்கு போனாலும் அது பற்றி ஜாலியாக பேசுவது அவரின் வழக்கம். அதேபோல், கிரிக்கெட்டில் பால் போடுவது போல இவர் நடமாடுவதும் ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைக்கும்.
சமீபத்தில் கூட எனக்கு போட்டியென யாருமே இல்லை. ஏனெனில், நான் அகில உலக சூப்பர்ஸ்டார். அந்த பட்டம் எனக்கு மட்டுமே உண்டு. விண்வெளி, கேலக்ஸி என நான் போய்விட்டேன். எனவே, பூமியில் யாரும் என்னுடன் போட்டி போட முடியாது என ஜாலியாக சொல்லி இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்தபோது ‘உங்களின் ஃபேவரைட் நடனம் ஒன்றை ஆடி காட்ட முடியுமா?’ என கேட்டனர். அதற்கு ‘சிப்பிக்குள் முத்து படத்தில் தாளத்தோடு ஒன்றாமல் தப்பு தப்பாக நடனமாட கமல் சார் அரை நாள் பயிற்சி எடுத்தாராம். ஆனால், பயிற்சி இல்லாமலேயே அதை நான் சிறப்பாக செய்வேன். எனவே, இந்த ஒரு விஷயத்தில் நான் கமல் சாரை விட சிறந்தவன்’ என ஜாலியாக பேசினார்.
இதையும் படிங்க: 10 சின்ன படம் காலி!. உங்க ரூல்ஸ் ஆர்.ஜே.பாலாஜிக்கு இல்லையா?!.. விளாசும் புளூசட்ட மாறன்!..