என்கூட வந்த SK. பெரிய ஆளாயிட்டாரு... நான் அப்படியே இருக்கேன்... குமுறும் நடிகர்

by sankaran v |
sk
X

sk

சிவகார்த்திகேயன் டிவியில் ஆங்கராக இருந்து படிப்படியாக தன் திறமை கொண்டு முன்னேறியவர். சினிமாவில் மெரினாவில் நடித்து கதாநாயகன் ஆனார். 3 படத்தில் தனுஷ் உடன் சகநடிகராக வந்து கலக்கினார். அந்த வகையில் அவர் படிப்படியாக தனது திறமை கொண்டு தான் முன்னேறி உள்ளார்.

அமரன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் என்று அவர் ஹிட் கொடுக்க ஆரம்பித்தார். மாவீரன் படம் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டியது. டாக்டர் படம் அவரை முன்னணி ஹீரோ அந்தஸ்துக்கு எடுத்துச் சென்றது. சமீபத்தில் கமல் தயாரிப்பில் வெளியான அமரன் படம் அவரை வேற லெவலுக்குக் கொண்டு சென்றது.

பட்டி தொட்டி எங்கும் படம் பட்டையைக் கிளப்பியது. முன்னணி நடிகர்களே அசந்து விட்டார்கள். படமும் வசூலில் சாதனை படைத்தது. 322 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது. 130 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் 322 கோடியை வசூலித்தது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அந்தப் படத்தின் கதை மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். உணர்ச்சிப்பூர்வமான கதை தான் காரணம்.

சமகால நடிகர்

அதற்கேற்ப சிவகார்த்திகேயனின் கடின உழைப்பும் காரணம் தான். இவர் இப்படி ஒருபுறம் வளர்ந்து கொண்டு இருக்க இவருடன் சமகாலத்தில் டிவியில் நிகழ்ச்சிக்கு வந்தவர் கோகுல். கலக்கப்போவது யாரு சீசனில் இருவரும் கலக்கியவர்கள் தான். ஆனால் அவர் சிவகார்த்திகேயனைப் பற்றி பொசுக்குன்னு இப்படி சொல்லிவிட்டாரே என்று எண்ணத் தோன்றுகிறது. என்ன சொல்கிறார்னு பாருங்க.

சிவகார்த்திகேயன் மாதிரி

கின்னஸ் சாதனைகள் படைத்தவர். சில படங்களில் நடித்த இவர் சிறந்த நடனக்கலைஞர். அது மட்டுமல்லாமல் மைம் கலைஞர். 'மானாட மயிலாட' புகழ் கோகுல் இப்படி தெரிவித்துள்ளார்.

gokul

gokul

நிறைய பேர் கமண்ட்ல சொல்வாங்க. நீங்களும் சிவகார்த்திகேயன் மாதிரி வந்து இருக்கணும்னு. நானும் விவரம் தெரியாத வயசுல நம்மகூட தான் வந்தாரு. அவரு மாஸ் ஹீரோ ஆகிட்டாரு. நாம அப்படியே இருக்கோம்னு ஃபீல் பண்ணிருக்கேன்.

எல்லாம் டைம் தான்

ஆனா, அவருக்கான டைம் வந்திருக்கு. நமக்கு வரல. அது வரும்னு நினைக்கிறேன். அதே மாதிரி யார் ட்ரெண்டிங்ல இருக்காங்களோ அவங்கள பேமஸ்னு நினைச்சிப்பாங்க. இன்னிக்கு ஜி.பி.முத்து எல்லாம் பேமஸ். அதனால அவருக்கு வாய்ப்பு வரும். திறமை எல்லாம் அடுத்து தான் என்று மனம் குமுறுகிறார் மைம் நடிகர்.

Next Story