பாலிவுட் என்ட்ரி!.. மும்பை புரமோஷனில் ஓபனாக பேசிய அல்லு அர்ஜுன்.. அப்படி என்ன சொன்னாரு?..

by ramya suresh |   ( Updated:2024-11-30 11:25:18  )
pushpa 2
X

pushpa 2

பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பது குறித்து மும்பை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் பேசி இருக்கின்றார்.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து பேன் இந்தியா நடிகராக மாறிவிட்டார். இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக புஷ்பா 2 திரைப்படத்தை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதையும் படிங்க: Vidamuyarchi: ‘விடாமுயற்சி’ டீஸருக்கு பிறகு அஜித்துக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம்! கொல மாஸ்

புஷ்பா திரைப்படத்தை விட புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் டிசம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கின்றார். மேலும் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனைத்து மொழிகளிலும் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

pushpa 2

pushpa 2

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இப்படத்தில் உருவாகி இருக்கும் கிஸ்கி பாடலை வெளியிட்டு ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மும்பையில் படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் கலக்கலான கெட்டப்பில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

மேலும் மேடையில் இருவரும் சாமி பாடலுக்கு நடனம் ஆடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து பேசியிருந்தார். நான் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பாலிவுட்டில் ஏன் இசையமைப்பதில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் தான் பாலிவுட்டில் நடித்தால் அந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் தனக்கு பாலிவுட் திரைப்படங்களின் நடிக்கும் எண்ணம் இல்லை. அந்த நேரத்தில் பாலிவுட் என்ட்ரி கொடுப்பது மிகவும் கடினமாக இருந்ததாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார். பாலிவுட் படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் முன்னதாக கூறியதை மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: எங்க அப்பாகிட்ட அப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கு… ஸ்ருதிஹாசனே இப்படி சொல்லிட்டாங்களே…

புஷ்பா திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடினார்களோ அதே அளவுக்கு பாலிவுட்டிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். தற்போது பாலிவுட்டிலும் அல்லு அர்ஜுனுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அங்கும் நேரடி ஹிந்தி திரைப்படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகின்றது.

Next Story