Vidamuyarchi: ‘விடாமுயற்சி’ டீஸருக்கு பிறகு அஜித்துக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம்! கொல மாஸ்

by Rohini |
vidamuyarchi
X

vidamuyarchi

Vidamuyarchi: எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி எந்த ஒரு போஸ்டரும் இன்றி திடீரென இரவு 11 மணி 8 நிமிட அளவில் ஒரு மாஸ் நடிகரின் ட்ரெய்லர் வெளியாகிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் இருக்காது. அதுவும் இன்று தமிழ் ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது .

இதற்கு முன்பு வரை விடாமுயற்சி பற்றிய அப்டேட் கொடுங்கள் கொடுங்கள் என ரசிகர்கள் கேட்டு கேட்டு சோர்வடைந்தது தான் மிச்சம் .ஆனால் ரசிகர்களுக்காக ஒரு அறிவிப்பு கொடுத்துவிட்டு அதன் பிறகு டீசரை வெளியிடலாம் என்று கூட அவர்கள் நினைக்கவில்லை. திடீரென டீசர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எல்லா நடிகர்களும் செய்து ரஜினி மட்டும் செய்யாத ஒரே சம்பவம்… இத கேளுங்க!..

இது சம்பந்தமாக லைக்காவும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எப்படி இவர்களால் மட்டும் இது சாத்தியமடைந்தது என்று தான் இன்று வரை அனைவரும் பேசிக்கொண்டு வருகிறார்கள். டீசரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகி இருக்கிறது. இதுவரை அந்த டீசரை பற்றி யாருமே எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை.

ஒரு ஹாலிவுட் படத்தின் டிரைலரைப் பார்த்ததைப் போல் இருக்கிறது என்று தான் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் திடீரென ஒரு ரசிகர் விடாமுயற்சி டீசரை பற்றி வீடியோவை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். இதோ அவர் அந்த வீடியோவில் கூறியது:

இரவு 11.08 மணிக்கு ஒரு பவர்ஃபுல்லான மோட்டிவேசன் கிடைத்தது. ‘எல்லாரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு’ என்ற விடாமுயற்சி டீஸரில் வந்த அந்த ஒரு வசனம். நேரமும் நமக்கு சாதகமா இல்ல. கூட இருக்கிறவங்களும் கைவிட்டுட்டாங்க எனும் போது நம்மை நாம் நம்பவேண்டும் என்பது உண்மை. விடாமுயற்சி டீஸரை பார்க்கும் போது தமிழில் ஒரு ஹாலிவுட் படம் போல் இருந்தது.

இதையும் படிங்க: எல்ஐகே படம் முதலில் நடிக்க வேண்டியது அந்த ஹிட் நடிகரா? லைகாவால் நடந்த மாற்றம்…

அஜித்தும் ஒரு ஹாலிவுட் ஸ்டார் போலத்தான் இருந்தார். மகிழ்திருமேனிக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் ஒரு சல்யூட். அஜித்திடம் இன்னொரு விஷயமும் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய சமீபத்திய ஒரு ரீலை பார்த்தேன். காருக்கு முத்தம் கொடுத்துவிட்டு அந்த காரை வேகமாக ஓட்டி சென்றார்.

அதை பார்க்கும் போது ஸ்போர்ட்ஸில் அவருக்கு இருக்கும் அந்த ஆர்வம் கன்விக்‌ஷன் எல்லாமே சேர்த்து விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிதான் என அந்த ரசிகர் கூறியிருக்கிறார். இவர் வீடியோவை பார்த்த பல பேர் அதிலிருந்து அஜித்தை ஹாலிவுட் ஸ்டார் என்றே கமெண்டில் கூறிவருகிறார்கள்.

Next Story