எல்லா நடிகர்களும் செய்து ரஜினி மட்டும் செய்யாத ஒரே சம்பவம்… இத கேளுங்க!..
Rajinikanth: தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் செய்த ஒரு விஷயத்தை ரஜினிகாந்த் மட்டும் இன்றளவும் செய்யவில்லை என்பது குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நடிகர்கள் என பட்டியலிடும் போது ரஜினிகாந்த், கமல்ஹாசன். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இதையும் படிங்க: அதென்ன 11.08? ‘விடாமுயற்சி’ டீஸர் வெளியான நேரத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?
இதில் பிரபல நடிகர்கள் எல்லாருமே சம்பாதிப்பதை மட்டுமே குறியாக வைத்து தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தங்கள் வருமானத்தை பெருக்க அவர்கள் கிடைக்கும் வலிகளை தவறவிடுவதில்லை.
இவர்கள் வருமானத்திற்கு முக்கிய பங்காக மாறி இருப்பது விளம்பர வாய்ப்புகள் தான். பிரபல நடிகர்கள் ஒரு பிராண்டில் நடித்து விட்டால் அதை அவர்களுடைய ரசிகர்கள் அதிகமாக வாங்குவதுதான் வழக்கம். இதனால் அந்த பொருளுக்கு மார்க்கெட்டில் வியாபாரமும் அதிகரிக்கும்.
இதற்காக பிரபல நடிகர்களை தங்களுடைய விளம்பரங்களில் நடிக்க வைக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். அந்த வகையில் கமல்ஹாசன் போத்தீஸ் நிறுவனத்திற்கும், விஜய் கோக் மற்றும் டொகோமோ நிறுவனத்திற்கும், தனுஷ் செண்டர் பிரஷ், சிம்பு அபி பஸ், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஜவுளி நிறுவனத்திற்கும் விளம்பரம் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: மீனாவுக்கு கிடைத்த சூப்பர் ஆர்டர்… கோமதியின் கோபத்தால் மிரண்ட குடும்பம்… கோபி நிலைமை அறிந்த ராதிகா!..
நடிகர் சூர்யா மற்ற நடிகர்களை விட காபி முதல் குளிர்பானம் வரை எக்கச்சக்கமான விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மீடியாக்களில் இருந்து தள்ளி இருக்கும் நடிகர் அஜித் கூட தன்னுடைய ஆரம்ப காலங்களில் சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு விளம்பரங்களிலும் நடிக்கவில்லை. இதன் மூலம் அவர் எந்த வருமானத்தையும் பார்க்கவில்லை. இருந்தும், போலியோ தடுப்பு, கண் தானம், தமிழ்நாடு பால் நுகர்வோர் சங்கத்திற்காக Palm Cola உள்ளிட்ட அரசு விளம்பரங்களில் நடித்து மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடித்த விளம்பரம்: https://www.youtube.com/watch?v=guXyG1imkYI