Connect with us
sk25

Cinema News

சத்தமே இல்லாம பூஜைய முடிச்சுட்டீங்க போலயே?… வேற லெவல் லுக்கில் எஸ்.கே-சுதா கொங்கரா..!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த்  வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.

இதையும் படிங்க: Biggboss Tamil8: தக் லைஃப்னு கடுப்பாக்கும் விஜய் சேதுபதி… இந்த போட்டியாளார் மீது வன்மத்தை கொட்டுறாரே!..

கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. படம் 5 வாரங்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 300 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகின்றது.

இப்படம் விரைவில் 350 கோடியை எட்டும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

sk-sudha kongura

sk-sudha kongura

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கின்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படம் எஸ்கே25.

இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகின்றார். சூர்யா முதலில் நடிக்க இருந்து பின்னர் விலகிய புறநானூறு திரைப்படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் தொடர்ந்து இப்படம் குறித்து அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி படத்தில் நடிக்க இருக்கின்றார் .

இதையும் படிங்க: சிவாஜி அப்படி சொன்னதும் எனக்கு ஆஸ்கரே கிடைச்ச மாதிரி இருந்தது… இயக்குனர் நெகிழ்ச்சி!

மேலும் நடிகர் அதர்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கின்றார். சிவகார்த்திகேயன் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதாக கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் அவரது கணவரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் சுதா கொங்கரா மங்களகரமான லுக்கின் இருப்பதால் ஒருவேளை படத்தின் பூஜையை முடித்து விட்டார்களா? அதனை வெளியில் சொல்லாமல் இருந்து வருகிறார்களா? என்று புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top