சிவாஜி அப்படி சொன்னதும் எனக்கு ஆஸ்கரே கிடைச்ச மாதிரி இருந்தது... இயக்குனர் நெகிழ்ச்சி!

by sankaran v |   ( Updated:2024-12-01 04:03:10  )
sivaji
X

sivaji

எஸ்.பி.முத்துராமன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம் கவரிமான். அதைத் தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம். சிவாஜிக்கு ஜோடியாக பிரமிளா நடித்தார். ஒரு பாடல் காட்சியை பெங்களூருவில் படமாக்க வேண்டி இருந்தது.

அந்தப் பாடல் காட்சியில் சிவாஜி, பிரமிளா, ஒரு குழந்தை பங்கேற்பதாக இருந்தது. அந்தப் பாடல் காட்சியை மறுநாள் காலையில் படமாக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் அவசரம் அவசரமாக எஸ்.பி.முத்துராமனைப் பார்க்க வந்தார் பிரமிளா.

Also read: மீண்டும் துள்ளுகிறதே தனுஷின் இளமை… இட்லி கடை படத்தோட புது ஸ்டில்லைப் பாருங்க..!

'நீங்க தான் என்னை இந்த இக்கட்டுல இருந்து காப்பாத்தணும். இன்னொரு படத்துல நான் நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு நான் அங்கே போயே ஆகணும். அது ஒட்டுமொத்த நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சி. அதனால் போக வேண்டி இருக்கு.

இதை எப்படி சிவாஜி சார்கிட்ட சொல்றதுன்னு தெரியல. நீங்க தான் அவருக்கிட்ட எடுத்துச் சொல்லி என்னை இந்த இக்கட்டான சூழல்ல இருந்து காப்பாத்தணும்' என்றார்.

உடனே எஸ்பி.முத்துராமன், பிரமிளாவை அழைத்துக் கொண்டு சிவாஜி சாரைப் பார்க்கச் சென்றார். அவரிடம் இந்த சூழலை எடுத்துச் சொன்னார். அதற்கு சிவாஜி, 'அவள் வரல. சரி. நீ என்ன செய்யப் போறே'ன்னு கேட்டார்.

kavariman

kavariman

அதற்கு எனக்கு ஒரு ஐடியா இருக்கு. நீங்க குழந்தை, டூப் வச்சி இந்தப் பாடலை எடுத்துருவோம். அடுத்தாற்போல பிரமிளா சம்பந்தப்பட்ட காட்சியை சென்னையில் எடுத்து விடுவோம் என்றார்.

அதன்பிறகு பெங்களூருவில் சிவாஜி, குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்தார். அப்புறம் சிவாஜி என் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடிச்சிக் கொடுத்துட்டேன். இனி நீ என்ன செய்வியோ தெரியாது என்று கிளம்பினார்.

அதன்பிறகு பிரமிளா சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தனியாக எடுத்து இரண்டையும் மேட்ச் செய்து சிவாஜியிடம் போட்டுக் காண்பித்தார் எஸ்.பி.முத்துராமன். அதைப் பார்த்துவிட்டு 'இது அப்படியே மேட்சிங்கா இருக்கு. எங்கூட பிரமிளா நடிக்கலன்னு யாரும் சொல்ல முடியாது. அந்தளவு மேட்ச்சா இருக்கு.

Also read: அதெப்படி திமிங்கலம் சாத்தியமாச்சு? அஜித் பற்றி சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க விக்கி..

ரொம்ப பிரமாதம். நீ வந்து தேர்ந்த டைரக்டர்னு நிரூபிச்சிட்டே'. சிவாஜியோட அந்தப் பாராட்டு எனக்கு ஆஸ்கர் விருதை வென்றது போல இருந்தது என்று எஸ்.பி.முத்துராமன் ஒரு கட்டுரையில் சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story