Thalapathy69: தளபதி விஜய் நடிப்பில் கடைசி படமாக உருவாக இருக்கும் தளபதி 69 படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை இயக்குனர் ஹெச் வினோத் தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
விஜயின் கடைசி படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக இருக்கிறார். கடந்த மூன்று திரைப்படங்களாகவே ஒவ்வொரு படத்திற்கும் விஜயின் சம்பளம் 50 கோடி வரை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காவாலா பாடலில் நான் செய்தது தப்பு!. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே தமன்னா!…
அந்த வகையில் தன்னுடைய கடைசி திரைப்படத்திற்காக நடிகர் விஜய் 275 கோடி வரை சம்பளமாக வாங்கலாம் எனவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு உச்சத்தில் இருக்கும் நிலையில் தன்னுடைய அரசியல் கட்சியை இந்த வருட தொடக்கத்தில் அறிவித்தார். அதன் அறிக்கையிலேயே தான் ஒப்புக்கொண்ட படத்தை முடித்த கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.
தளபதி69
அதன்படி அவர் ஒப்புக்கொண்ட முதல் படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அத்தரை படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. தொடர்ந்து தன்னுடைய கடைசி திரைப்படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன்னர் விஜய் 15க்கும் அதிகமான இயக்குனர்களிடம் கதை கேட்டதாக கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம் முதல் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி வரை லிஸ்டில் இருந்தனர். பெரிய அளவு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இயக்குனர் ஹெச் வினோத் தளபதி 69 திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
பிரபல கே வி என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
ஒன் லாஸ்ட் டைம்
பொதுவாக நடிகர் விஜயின் படத்தை எடுத்துக் கொண்டால் அதன் டைட்டில் அறிவிப்பிலிருந்து ரிலீஸ் வரை ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேட்டிற்கும் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். ஆனால் இந்த முறை ஒவ்வொரு அறிவிப்பும் இதுதான் கடைசி என்ற கவலையை விஜய் ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கிறது.

அந்த வகையில் முதல் ஒன் லாஸ்ட் டைம் பட்டியலில் விஜயின் தளபதி 69 டைட்டில் அறிவிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ஹெச் வினோத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் தளபதி 69 போஸ்டரை வெளியிட்டு அதில் அப்டேட் மந்த் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன்படி இந்த மாதம் டிசம்பர் 31ஆம் தேதி படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மாதம் டிசம்பர் விஜயின் 32 வருட சினிமா வாழ்க்கையை குறிக்கும் விதமாக டைட்டிலை வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம். விரைவில் இதுகுறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.
