Kamalhaasan: இயக்குனர்கள்கள் எல்லோருக்கும் ஒரு பாதிப்பு இருக்கும். வாலிப வயதில் அவர்களை ஏதேனும் ஒரு திரைப்படம் மனதை உலுக்கி இருக்கும். அந்த படத்தை பலமுறை பார்த்திருப்பார்கள். அந்த படத்தின் சிந்தனையோடு உறங்கி அது பற்றியே யோசித்து, பேசி நாட்களை கடத்தி இருப்பார்கள்.
அலைபாயுதே படத்தை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்தான் கவுதம் மேனன். மணிரத்னத்தின் தீவிர ரசிகரான இவர் மணிரத்னம் இயக்கும் எல்லா படங்களையும் பலமுறை பார்ப்பார். ஒரு தீவிரமான ரசிகனே ஒரு இயக்குனாராக மாற முடியும். இதற்கு உதாரணமாக பலரும் இருக்கிறார்கள்.

இப்படி எல்லா இயக்குனர்களிடம் போய் கேட்டால் ஒரு படத்தை சொல்வார்கள். இப்படி கமலால் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்ட ஒரு இயக்குனரை பற்றி பார்க்கலாம்.. அவர் வேறு யாருமல்ல. காதல் கோட்டை படத்தை கொடுத்த அகத்தியன்தான். கதாநாயகன், கதாநாயகி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலேயே காதல் செய்ய முடியும் என்பதை முதன் முதலாக காட்டியவர் இவர்தான்.
கார்த்தி – சுப லட்சுமியை வைத்து இவர் எடுத்த கோகுலத்தில் சீதை படம் இப்போதும் பலரின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. எதையும் வித்தியாசமாக யோசித்து படமெடுக்கும் இயக்குனர் இவர். பிரகாஷ்ராஜை வைத்து அவர் இயக்கிய விடுகதை படத்தை பார்த்தாலே அது தெரியும்.

இந்த படத்தை தயாரித்தவர் இயக்குனர் பாலச்சந்தர். காதல் கோட்டை படத்தை பார்த்துவிட்டு ‘என்னை விட நீ வயதில் பெரியவனாக இருந்தால் உன் காலில் விழுந்திருப்பேன்’ என அகத்தியனிடம் சொன்னார் அவர். காதல் கோட்டை படத்திற்கு பின் பல படங்களை இயக்கினாலும் பெரிய வெற்றியை கொடுக்க முடியவில்லை என்பதால் சினிமாவிலிருந்து அகத்தியன் விலகியே இருக்கிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘என்னோட வாழ்வில் இழப்பு ஏற்படும்போதும், ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போகும் போதும் நான் கமல் சாரைத்தான் நினைத்து கொள்வேன். அவருடைய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்கள் என்னை புரட்டி போட்டது. அதிலும், சலங்கை ஒலி படத்தை தொடர்ந்து 60 நாட்கள் இரவு காட்சியை பார்த்தேன்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐய்யயோ இவர் ஹீரோவா? பின்னாளில் 80 படம் 40 ஹீரோயின்களுடன் நடித்த அந்த ஹீரோ
