சரவணன் சொல்லிய உண்மை… உடைந்த பாண்டியன்… பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2!

Published on: March 18, 2025
---Advertisement---

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியல் இந்த வாரம் பரபரப்பான காட்சிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மகன்களுக்கு திருமணம் முடிந்த கையோடு பாண்டியன் தன்னுடைய மகள் அரசிக்கு அதிகமாக செல்லும் கொடுத்து வளர்த்து வருகிறார். ஏற்கனவே அவர் மீது கடுப்பில் இருக்கும் சக்திவேல் தன்னுடைய மகன் குமாரை தூண்டிவிட்டு இருக்கிறார்.

Also Read

அவரும் சரியாக காய் நகர்த்தி அரசியை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து விட்டார். தற்போது அவரை தியேட்டரில் பார்த்த சரவணன் அரசியை அழைத்து கொண்டு வருகிறார். வீட்டில் எல்லாரும் வந்துவிட பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அரசியை அழைத்து வரும் சரவணனிடம் வாசலில் நின்று அப்பாவிடம் சொல்லாமல் இருக்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் சரவணன் அதற்கு தனக்கு உரிமை இல்லை. அப்பாவிடம் சொல்வதாக சொல்லி அழைத்துக்கொண்டு வருகிறார்.

வீட்டில் எல்லாரையும் சரவணன் ஏற்கனவே வரச்சொல்லி இருப்பதால் அவர்கள் கேள்வி கேட்கின்றனர். மொத்த குடும்பத்திடமும் அரசி காதலிப்பதாகவும் அந்த பையனுடன் சினிமாவுக்கு சென்றதாகவும் சொல்ல கோமதி நம்பிக்கையுடன் தன் மகள் குறித்து பொய் சொல்ல வேண்டாம் என்கிறார்.

இருந்தும் கோமதி நம்பிக்கையுடன் அவருக்கு சப்போர்ட் செய்ய யாரை காதலிக்கிறாள் எனத் தெரிந்தால் உயிரை விட்டுடுவீங்க என்க எல்லாரும் அதிர்ச்சியுடன் இருக்கின்றனர். இருந்தும் கடுப்பான சரவணன் அரசி அந்த குமரவேலை காதலிப்பதாக விஷயத்தை உடைக்கிறார்.

இருந்தும் செந்தில் தப்பா பேசாத எனக் கூற சரவணன் நம்ம தங்கச்சியை பத்தி நானே தெரியாம பேசுவேனா? தியேட்டரில் என் கண் முன்னாடி பார்த்ததை தான் சொன்னேன் என்கிறார். அவன் தன்னை மச்சான் என்று கூப்பிட்டதாகவும் கூற செந்தில் அதிர்ச்சி ஆகிறார்.

கதிர், பழனி என எல்லாரும் அரசியை திட்டிக்கொண்டு அழுகின்றனர். ஆனால் பாண்டியன் எதுவும் பேசாமல் நிலை குலைந்து நிற்கிறார். ஒருகட்டத்தில் மயங்கி விழுக குடும்பத்தினர் அவரை அதிர்ச்சியுடன் எழுப்பி கொண்டு இருக்கின்றனர். கோமதி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

Leave a Comment