Connect with us

latest news

யாரும் ஓடிடி பக்கம் போய்டாதீங்க… வச்சு செஞ்ச சுசீந்திரன்… 2கே லவ் ஸ்டோரி எப்படி இருக்கு?

2K Love Story: தமிழ் சினிமாவில் வாரா வாரம் ஓடிடிக்கு வரும் படங்களின் விமர்சனம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார வெளியீடாக பிரைம் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கும் 2கே லவ் ஸ்டோரி எப்படி இருக்கிறது என்பதன் தொகுப்புகள்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் டி இமான் இசையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 2கே லவ் ஸ்டோரி. நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடிக்குழு போன்ற கதைகளை கொடுத்து வந்த இயக்குனர் சுசீந்திரன் படமா என்ற சந்தேகமே வந்துள்ளது.

சின்ன வயசுல இருந்தே நட்பா பழகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான நட்பை இந்த சமூகம் எப்படி பார்க்கும். அதனால் அவர்கள் இடையே வரும் சிக்கல்களும், அதை எப்படி சரி செய்கிறார்கள் என்பதை 2கே கிட்ஸ் வைத்து சொல்வதே படத்தின் கதையாக அமைந்துள்ளது.

ஹீரோ கதறு விடுகிறார். அவருக்கு ஏன் இந்த நடிப்பு ஆசை என்று தான் தெரியவில்லை. மேலும், ஹீரோயின் ஓகே ரகம். மேலும் இப்படம் பிரியமான தோழியின் ஜெராக்ஸ் என்று கூட சொல்லலாம். படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கும் பாலசரவணன் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறார்.

வரிசையாக ஹிட் கொடுத்து வந்த சுசீந்திரன் இப்படி ஒரு அரதபழசான கதையை எடுக்க ஒப்புக்கொண்டதே பெரிய ஷாக்கான விஷயம் தான். இனிமே அவர் இயக்கத்திற்கு பிரேக் விடுவது அவருக்கு மட்டுமல்ல நம்மை போன்ற ரசிகர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

ஆனால் இந்த படத்தினை எப்படி டி.இமான் ஒப்புக்கொண்டார் என்றுதான் தெரியவில்லை. இருந்தும் அவர் பாடல்களுக்காக கூட படத்தினை திடப்படுத்திக்கொண்டு பார்க்கும் நிலை இருக்கிறது. அய்யா விட்ருங்க எங்களை ப்ளீஸ்!..

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top