உன் அப்பன விட நான்தான்டி பெரிய நடிகன்!. ஸ்ருதிஹாசனை வம்பிழுத்த நடிகர் திலகம்!…

Published on: March 18, 2025
---Advertisement---

Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜியின் மடியில் வளர்ந்த பிள்ளை கமல்ஹாசன். 1962ம் வருடம் வெளிவந்த பார்த்தால் பசி தீரும் படத்தில் சிறுவனாக கமல் நடித்திருப்பார். அப்படி சிவாஜியை பார்த்து வளர்ந்த நடிகர்தான் கமல்ஹாசன். டீன் ஏஜில் என்ன ஆகலாம் என்கிற குழப்பத்தில் இருந்தவர் நடன இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவருக்கெல்லாம் படப்பிடிப்பில் நடனம் சொல்லி கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து நடிகராக மாறினார். பாலச்சந்தரின் இயக்கத்தில் படிப்படியாக வளர்ந்து தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார். கமலுக்கு பிடித்த நடிகர்களின் வரிசையில் சிவாஜி கணேசன், நாகேஷ் என பலரும் இருந்தனர்.

சிவாஜியை தனது தந்தை போலவே பாவித்துக்கொண்டார் கமல், சிவாஜிக்கும் கமல் மீது அதீத அன்பும், அக்கறையும் உண்டு. கமலின் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்பட்டவர்களில் சிவாஜி முக்கியமானவர். அன்னை இல்லத்திற்கு சென்று அடிக்கடி சிவாஜியை சந்தித்து பேசும் பழக்கம் கமலுக்கு இருந்தது.

தேவர் மகன் படத்தில் சிவாஜியை தனது தந்தை வேடத்தில் நடிக்க வைத்தார் கமல். அந்த படத்தில் சிவாஜிக்கும் கமலுக்கும் இடையேயான காட்சிகள் மிகவும் உணர்வுப்பூர்வாக சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில் சிவாஜி இறந்தபின் அவரின் நாற்காலியில் கமல் அமர்வது போல காட்சி வரும். அதில், தனது கலை வாரிசு கமல்தான் என சிவாஜியே சொல்வது போல இருக்கும்.

இந்நிலையில், ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியபோது கமல் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துகொண்டார். நான் வெளியே செல்லும்போது சில நாட்கள் ஸ்ருதியையும், அக்‌ஷராவையும் அன்னை இல்லத்தில் விட்டு விட்டு வருவேன். அவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதை ‘காட் பாதர் படத்தில் மார்லன் பிராண்டோ பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருப்பார். அவர்களோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருப்பார்.

ஒருநாள் நான் குழந்தைகளை அழைத்து செல்ல சென்றபோது என்னை கையெடுத்து கும்பிட்ட சிவாஜி ‘உன் பொண்ணு ஸ்ருதி மகா கெட்டிக்காரிடா.. அவகிட்ட வம்பிழுக்க நினைச்சி ‘இந்தியாவிலேயே சிறந்த நடிகர் யாருன்னு தெரியுமாடி உனக்கு?’ எனக்கேட்டேன். பதில் சொல்ல முடியாமல் கீழேயே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ‘நான் சொல்லவா.. அது நான்தான். வேணும்னா உன் அப்பகிட்டு கேளு. அவன் சொல்லுவான்’ன்னு சொன்னேன்.

கோபத்தில் பல்லைக்கடித்த ஸ்ருதி சிறிது நேரம் கழித்து ‘என் அப்பா அந்த மரத்துல ஏறுவார்.. நீங்க ஏறுவீங்களா?’ என கேட்டாள். நான் உடனே தோல்வியை ஒத்துக்கிட்டேன். அது என்னால முடியாதும்மா.. அதலாம் என்னால முடியாதும்மா. அதெல்லாம் உங்க அப்பான்தான் செய்வான்னு சொல்லிட்டேன் என சொல்லி சிரித்தார்’ என கமல் பகிர்ந்துகொண்டார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment