latest news
அப்பா வயசில் அந்த இயக்குனர்… அப்படி செய்வாருன்னு நான் கனவிலும் நினைக்கல… நடிகை குமுறல்
Published on
‘ஆத்தங்கரை மரமே அரசமர இலையே’ என்ற பாடலைக் கேட்டால் நமக்கு இவரது ஞாபகம்தான் வரும். அவர்தான் நடிகை அஸ்வினி நம்பியார். இவர் ஒரு சிக்கலான தகவலை மிகவும் யதார்த்தமாகவும், அதே நேரம் உறுதியாகவும் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. அவரிடம் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கலந்துரையாடல் நடத்துகிறார். அப்போது அவர் கேட்ட கேள்வி, பதில் விவரம் இதோ.
உங்க அப்பா வயதுடைய இயக்குனர் உங்கக்கிட்ட தவறா நடந்துக்கிட்டாருன்னு நீங்க ஒரு பத்திரிகை பேட்டியில குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்தேன். அந்தக் காலத்துலயே அப்படி ஒரு மோசமான சூழ்நிலை இருந்ததான்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடிகை அஸ்வினியிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அந்த இயக்குனர்: இருந்தது. டைரக்டர்தான். அம்மா கூட இருந்ததனால அந்த மாதிரி சந்தர்ப்பத்தை தவிர்க்க முடிஞ்சது. ஆனா அப்பவும் அவரை ஆபீஸ்ல போய் சந்திக்க வேண்டி இருந்தது. அப்ப கூட அப்பா ஸ்தானத்துல இருக்குற அந்த இயக்குனரோட நினைச்சிக்கூட பார்க்காத ஒரு சிச்சுவேஷனல தனியா இருக்குற சூழல் வந்தது.
டீன்ஏஜ்: அப்போ எங்கிட்ட அவர் தப்பா நடந்துக்கிட்டாரு. எங்க அம்மா எங்கூட வரமுடியாத சூழ்நிலை. அவங்களுக்கு உடல்நலம் சரியில்ல. தப்பா அவரு நடந்துக்கிட்டபோது கூட அந்த டீன்ஏஜ் வயசில எனக்கு அந்தப் புரிதல் இல்ல. யார் தப்பா நடந்துக்கிட்டது? அப்படின்னே எனக்குத் தெரியல… ஏன்னா அந்த சம்பவத்துக்குப் பிறகு எங்க அம்மாவை நேருக்கு நேரா பார்க்க முடியல.
தப்பு பண்ணின மாதிரி தோணல: ‘என்னடி ஒரு மாதிரியா டல்லா இருக்கே’ன்னு கேட்டாங்க. திருப்பி எனக்கு எப்படி பதில் சொல்றதுன்னு தெரியல. அந்த வயசுக்கு நான் என்ன நினைச்சேன்னா நான்தான் தப்பு பண்ணிட்டேன். அவரு தப்பு பண்ணின மாதிரி தோணல. நான்தான் அதுக்கு அனுமதி கொடுத்துட்டேன். தப்பு பண்ணிட்டேன். அதனால இது என்னோட தப்புதான்னு உணர்ந்து நான் தூக்க மாத்திரை எடுத்துக்கிட்டேன்.
எப்படி இருக்கீங்க?: அதுக்கு அப்புறம்தான் நான் மனதளவில் உறுதியானேன். அந்த இயக்குனரை நான் அதுக்கு அப்புறம் பார்த்ததில்லை. இப்ப பார்த்தாலும் அந்த வெறுப்பை மனதிற்குள்ளேயே வச்சிக்காம சார் எப்படி இருக்கீங்கன்னு என்னால கேட்க முடியும். அந்த நெகடிவிட்டியை மனசுக்குள்ளயே வச்சிருந்தா அது என்னைத்தான் பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும்...