Connect with us

latest news

சிங்கப்பெண்ணே: அன்பு வெளிப்படுத்திய காதல்…. எரிமலையாய் வெடித்த மகேஷ்..! அடுத்து வரும் ஆபத்து..!

சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்த சம்பவத்தின் கதைச்சுருக்கம்:

அன்பு, ஆனந்தி, வார்டன், மகேஷின் அப்பா, அம்மா ஆகியோர் ஆனந்தியின் ஊருக்குச் செல்கின்றனர். அங்கு போய் அவளது பெற்றோரை சந்தித்து அவர்களிடம் அன்புவின் காதலை எடுத்துச் சொல்லி எப்படியாவது புரிய வைக்க வேண்டும். அதன் மூலம் அவர்களது காதலை வாழ வைக்க வேண்டும். அதே நேரம் மகேஷூக்கும் இவர்களது காதலைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணிச் செல்கின்றனர்.

அதே நேரம் மகேஷ் இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்களின் காரை மறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான். அப்போது மகேஷின் அப்பா, வார்டன், ஆனந்தி மூவருமே அன்பு, ஆனந்தியின் காதலைப் பற்றி எவ்வளவோ சொல்லிப் பார்க்கின்றனர். ஆனால் மகேஷோ அதை நம்ப மறுக்கிறான். அன்பு சொன்னால் மட்டும் தான் நம்புவேன்.

அவனுக்குத்தான் நான் ஆனந்தியின் மீது உயிரையே வைத்து இருக்கிறேன் என்பது தெரியும். அதனால் அவன் சொல்ல மாட்டான் என்று குமுறுகிறான் மகேஷ். ஆனந்தி அன்புவிடம் நம்ம காதலைப் பற்றி இப்பவாவது மகேஷ் சாரிடம் சொல்லுங்க சொல்லுங்க அன்புன்னு கதறுகிறாள். ஆனால் அன்புவோ செய்வதறியாது திகைத்து நிற்கிறான். கடைசியில் கோபத்தில் காரில் ஏறிக் கிளம்பச் செல்கிறான். அப்போது அன்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னோட காதலை மகேஷிடம் சொல்கிறான்.

‘எவ்வளவோ தடவை அந்தக் காதலை சொல்ல முயன்றும் ஏதோ ஒரு சூழல் வந்து தடுத்தது. நாம் இருவரும் ஒரே நேரத்தில்தான் ஆனந்தியைக் காதலித்தோம். கோவில் திருவிழாவின்போதுதான் நீங்க ஆனந்தியைக் காதலிப்பதாக சொன்னீங்க. அதே நேரம்தான் நானும் காதலித்தேன். என்னை மன்னிச்சிடுங்க’ன்னு மகேஷின் காலில் அழுதபடி மன்னிப்புக் கேட்கிறான் அன்பு.

ஆனால் இதை சற்றும் எதிர்பாராத மகேஷ் கோபம் உச்சந்தலைக்கு ஏற, ‘துரோகி’ன்னு அன்புவை எட்டி உதைக்கிறான். எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்களேடான்னு உன்னைக் கொல்லாம விட மாட்டேன்னு கோபத்தில் அங்கும் இங்கும் அலைகிறான். கடைசியில் சாலை ஓரத்தில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அன்புவின் தலையில் போட வருகிறான். இதைக் கண்டு அதிர்ந்த ஆனந்தி அன்புவைக் காப்பாற்றுவதற்காக அவனின் மேல் போய் விழுகிறாள்.

கொல்றதா இருந்தா எங்க ரெண்டு பேரையும் சேர்த்துக் கொல்லுங்க மகேஷ் சார்னு கதறுகிறாள். உடனே மகேஷ் கல்லைத் தூக்கி வேறு பக்கம் போட்டுவிட்டு பைத்தியம் பிடிச்சவன் போல கத்திக் கூப்பாடு போடுகிறான். காரில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் தலையால் முட்டி உடைக்கிறான். இதனால் நெற்றியில் காயம் பட்டு ரத்தம் வழிகிறது.

உடனே அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று மகேஷின் அப்பா மருத்துவரை வரச்சொல்லி சிகிச்சை அளிக்கிறார். இதுஒரு புறம் இருக்க ஆனந்தியிடம் அவரது மாமியார் இனி நீங்க அந்தக் கம்பெனிக்குப் போகக் கூடாது. வேற கம்பெனியில் வேலை பாருங்கன்னு சொல்றாங்க. அதை அன்புவும் ஆமோதிக்கிறான். அதே சமயம் ஆனந்தி நடந்த விவரத்தை எல்லாம் அவளது அக்காவிடம் போன் போட்டுத் தெரியப்படுத்துகிறாள். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் ஊசி போட்டுவிட்டு தூக்கத்துக்கானதுதான்.

அவன் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தால் கொஞ்சம் நார்மலாக வாய்ப்பு இருக்கு. அல்லது அவனது மனசுக்குப் பிடிச்ச மாதிரி எல்லாமும் நடக்கணும்னு சொல்றாரு. அதன்பிறகு அசந்து தூங்கும் மகேஷூக்குக் கனவில் அன்பு ஆனந்தியைக் காதலிப்பதாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. உடனே கோபத்தில் படுக்கையில் இருந்து எழுகிறான். நேராகக் காரில் ஏறி வார்டனைப் பார்க்க வருகிறான். அவன் கையில் ஹாக்கி மட்டை ஒன்று இருக்கிறது. கேட்டை எட்டி மிதித்தபடி உள்ளே வருகிறான். செக்யூரிட்டி பதைபதைக்கிறான்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top