latest news
கமல் படத்துல கதையே ரெடியாகல… ஆனா கம்போசிங், பாடல் ரெடி.! இளையராஜாவின் ஆச்சரியம்
Published on
இளையராஜாவும், கமலும் ராஜபார்வை படத்தின் போது நடந்த சில விஷயங்களை சுவாரசியமாகச் சொல்கிறார்கள். வாங்க பார்க்கலாம். ராஜ்கமல் ஆரம்பிக்கும்போது கதையைக் கேளுங்க. முதல் படம் ராஜபார்வை. கம்போசிங் கூப்பிடறாரு. கதையைக் கேட்கல. நாளைக்கு பூஜை இருக்கு.
ராஜபார்வை: கதை இன்னும் ரெடியாகலன்னு சொல்றாரு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். அதே மாதிரி கவிஞர் வரும்போதும் சொல்றாரு கமல். ப்ளைண்ட் மேன் பற்றிச் சொல்லணும்னு மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதுதான் அழகே அழகு பாடலாக மாறியது என்கிறார் கமல்.
ஒரு அங்கம் கைகள் அறியாதது: மேலும் அவர் சொல்கையில், சிகரெட்டை உறிஞ்சிக்கிட்டு புகை ஊதும்போதே கவிதையும் வந்துடும். தோள் பட்டையில இருந்து விளக்குறாரு. அப்புறம் சங்கோஜமானா ஒரு அங்கத்தை மிஸ் பண்ணிட்டு டைரக்டரா ஹிப்புக்குப் போயிடுறாரு. மிச்சம் இருக்குற தரராரா…தாராவுக்கு லைன் போடணும். நாங்க யோசிச்சி முடிக்கிறதுக்குள்ள ஒரு அங்கம் கைகள் அறியாததுன்னு சொல்லிட்டாரு என கமல் சிரிக்கிறார்.
அழகே அழகு..: 1981ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ராஜபார்வை. மாதவி, ஒய்ஜி.மகேந்திரன், எல்வி.பிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர். இந்தப் படத்தில் அந்திமழை பொழிகிறது பாடலை எழுதியவர் வைரமுத்து. ‘அழகே அழகு..’ பாடலை எழுதியவர் கண்ணதாசன்.
முதல் சொந்த படம்: விழி ஓரத்து கனவு பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது கமலின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸில் வந்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முரண்பாடு: படம் முழுவதும் கமல் கண் தெரியாதவராகவே நடித்து அசத்தி இருப்பார். கருப்பு கண்ணாடி போட்டு குச்சியை ஊன்றியபடி வருவார். பிளைன்ட் மேனாக இருந்தாலும்கூட ஸ்டைலாக இருப்பார் கமல். படத்தின் பெயரோ ராஜபார்வை. படத்தில் நாயகனோ கண் தெரியாதவர்.
இதென்னடா புதுசா இருக்குன்னு அன்றைய ரசிகர்களை பேச வைத்த படம். அதே போலத்தான் பேசும் படம்னு பேரு வச்சிட்டு படம் முழுவதும் ஊமைப்படமாகவே எடுத்திருப்பார் கமல்.
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும்...