மனைவியை விவாகரத்து செய்த மாதம்பட்டி ரங்கராஜ்… இரண்டாம் காதலி இவர்தானா?

Published on: March 18, 2025
---Advertisement---

Madhampatti Rangaraj: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து இருப்பதாகவும் இரண்டாம் காதலியை விரைவில் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

பிரபல குக்கிங் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது சினிமா பிரபலங்கள் வீட்டு விஷேசங்களில் தற்போது தடபுடலாக சமைத்து வருகிறார். அவர் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மற்றும் பென் குயின் படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இதை தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்து வந்தார். அவர் திடீரென சீசன் 5ல் இருந்து வெளியேற அவர் இடத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு நடுவராக வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். முதலில் பெரிய அளவில் அவர் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

தொடர்ந்து நிகழ்ச்சியின் பைனல் எபிசோட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அவருக்கு ரசிகர்களும் அதிகளவில் உயர்ந்தனர். இவரின் குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் தொடர்ச்சியாக வைரலானது.

இதுமட்டுமல்லாமல், மாதம்பட்டி ரங்கராஜின் ஆபாச வீடியோக்கள் வைரலானதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது தன் முதல் மனைவியை பிரிந்து விட்டாரா என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

தற்போது காதலர் தினத்தில் அவர் செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட்டாக இருக்கும் ஜாய் என்பவருடன் இருப்பதாக ஆதாரத்துடன் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்தில் ஜாய் தன் பெயரை ஜாய் ரங்கராஜ் எனக் கையெழுத்து போட்ட படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது.

இதனால் ரங்கராஜ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இவரை இரண்டாம் திருமணம் செய்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை இன்னமும் அவர் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் இனிமேல் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment