Cinema News
அந்த மலையாள இயக்குனருடன் சூர்யா இணைகிறாரா? பிரபல நடிகர் சொன்ன ஷாக் நியூஸ்
Surya: சூர்யா தொடர்ச்சியாக கோலிவுட்டில் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மலையாள இயக்குனர் தரப்பிலிருந்து விளக்கம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகினார். ஜோதிகாவின் குடும்பத்துடன் இருப்பதாக கூறிக் கொண்டாலும் அவருக்கு பாலிவுட் நடிக்க ஆசை இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாலிவுட் இயக்குனர்களிடம் கதை கேட்பதை மட்டுமே ஆர்வமாக கேட்டு வந்தார். அந்த வகையில் மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்படமாக கர்ணன் உருவாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் வெளிவந்த கங்குவா திரைப்படம் ஹிந்தி உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான தியேட்டர்களில் வெளியாகியும் படம் பெரிய அளவில் நஷ்டத்தை தான் பட குழுவுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.
இதனால் நடிகர் சூர்யாவை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினால் அது படத்திற்கு மேலும் பிரச்சனையாக அமையும் என அப்படத்தை கைவிட முடிவெடுத்தனர். இதனால் நடிகர் சூர்யா இருக்கும் இடத்தை விடக்கூடாது என தற்போது கோலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படம் என வரிசையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ரொம்ப காலமாக கிடப்பிலிருந்த வாடிவாசல் படமும் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல மலையாள இயக்குனரான பேசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது இது குறித்து பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ் தெரிவிக்கையில் அப்படி பரவும் தகவல் பொய்தான் என பேசிலே தெரிவித்து விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
