Connect with us

latest news

எப்பவும் அஜித்தான்.. விஜயை டீலில் விட்ட திரிஷா.. கதறனுவங்களுக்கு நல்ல பதிலடி

நம்பர் ஒன் நடிகை: தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் ஒரு துணை நடிகையாகத்தான் படங்களில் நடித்து வந்தார். ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக படமுழுக்க அவருடன் இருப்பார் திரிஷா. அதன் பிறகு மௌனம் பேசியதே படம் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஒரு அழகு பதுமையாக காணப்பட்டார்.

அழகான பதுமை திரிஷா: இள வயது, அழகான தோற்றம், பார்த்ததும் ஈர்க்கின்ற முகம் என இளசுகளின் மனதில் ஒரு கனவுக்கன்னியாக வலம் வர ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டிலுமே கலக்கி வருகிறார். எத்தனையோ படங்களில் பல நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்திருந்தாலும் இவங்க ஜோடிதான்பா சூப்பர் என்று சொல்லும் வகையில் ஒரு சில நடிகர்களுடனான திரிஷாவின் கெமிஸ்ட்ரிதான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஆஸ்தான நடிகை: அது விஜய், அஜித், விக்ரம், சூர்யா. இவர்களுடன் நடித்த திரிஷாவின் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. விஜயுடன் ஆதி, கில்லி , திருப்பாச்சி போன்ற படங்களில் இருவருமே துருதுருவென கேரக்டரில் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போடுவதும் ஒட்டிக் கொள்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்கள். அதே போல் அஜித்துடன் ஜீ, கிரீடம், மங்காத்தா போன்ற படங்களை குறிப்பிடலாம்.

ரொமாண்டிக்கில் கலக்கிய திரிஷா: அஜித் திரிஷாவின் ரொமாண்டிக் போர்ஷன் பெரிதளவில் பேசப்பட்டிருக்கிறது. அதே போல் விக்ரமுடன் பீமா, சாமி போன்ற படங்களிலும் சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்திலும் நடித்து அசத்தினார். இந்த நிலையில் திரிஷாவின் ஒரு பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது திரிஷாவிடம் ‘ நான்கு நடிகர்களின் பெயர்களை கொடுத்து ரேங்க் கொடுக்க வேண்டும்’ என சொல்லியிருந்தார்கள்.

அதில் அஜித்துக்கு முதல் ரேங்க், விக்ரமுக்கு இரண்டாவது ரேங்க், சூர்யாவுக்கு மூன்றாவது ரேங்க், விஜய்க்கு நான்காவது ரேங்க் கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அவர் ஹீரோயினாவதற்கு முன்பிருந்தே அஜித்தின் தீவிர ரசிகையாம். எப்பொழுதும் ஃபேவரைட் நடிகர் என்றால் அது அஜித்தான் என்றும் கூறியிருக்கிறார். இது தெரியாமல் வெளியில் இருக்கிறவர்கள் விஜயை துரத்தி வருகிறார் திரிஷா என்று அவரது வாழ்க்கையையே குழி பறித்து வருகிறார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top