அதெல்லாம் ஒரு படமா? அட்லீ என்னை ஏமாற்றிவிட்டார்… கடுப்பாகி கழுவி ஊற்றும் பிரபல நடிகை…

Published on: March 18, 2025
---Advertisement---

Sakshi Agarwal: பிரபல இயக்குனர் அட்லீயின் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை ஒருவரும் அட்லீயின் படம் குறித்து பேசி இருக்கிறார்.

அட்லீயின் படங்கள்: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முதல் முறையாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. அப்படத்தினை தொடர்ந்து வரிசையாக மூன்று படங்களை விஜயை வைத்து இயக்கினார். ஆனால் முதல் படமாக வெளிவந்த ராஜா ராணி படம் ரசிகர்களிடம் ஹிட்டடித்தது.

இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மௌன ராகம் படம் என விமர்சிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக அட்லீக்கு இப்படம் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது.

இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சீனில் சந்தானம் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் வெளியில் சீன் காட்டும் பெண்கள் பற்றி பேசுவார். அதில் இடம்பெற்ற நடிகை சாக்‌ஷி அகர்வால் தானாம். இதுகுறித்து சாக்‌ஷி கூறுகையில், ராஜா ராணி படத்தில் நடித்ததற்கு நான் இப்போ மோசமாக உணர்கிறேன்.

ஆனால் நான் சினிமாவிற்கு வந்த போது எனக்கு எதுவுமே தெரியாது. ஒரு புரோடியூசர் வேலை என்ன டைரக்டர் வேலை என்ன என்று எதுவுமே தெரியாது. அப்படி ஒரு சமயத்தில் தான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் அதற்காக நான் தவறு செய்துவிட்டதாக உணரவில்லை. இருந்தும் நடக்காமல் இருந்து இருக்கலாம் என நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு இந்த படத்தில் சொன்னது வேறு நடந்தது வேறு. அப்போ கதை கூட கேட்க தெரியாது. இன்று அந்த அறிவு இருக்கலாம். ஆனால் அப்போ 15 நாட்கள் ஷூட்டிங் என்றார்கள். சரி என்ற ஐடியாவில் நினைத்து செய்தேன். ஆனால் அது இப்படி வரும் என நினைக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சாக்‌ஷி அகர்வால் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில், சமீபத்தில் தன்னுடைய 15 வருட காதலரை மணமுடித்து இருக்கிறார். நாகர்கோவில் காசி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கு ப்யர் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment