Connect with us

latest news

ஜெயலலிதாவுக்குப் பிடித்த பாரதிராஜா படம்? அதுவும் 15 தடவை பார்த்தாராமே!..

கிராமிய மணம் கமழும் படங்களை எடுப்பதில் கில்லாடி யாருன்னு கேட்டா டக்கென சொல்லலாம் பாரதிராஜா என்று. தமிழ்சினிமா உலகில் இயக்குனர் இமயம் அவர்தான். அவரது இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில், பதினாறு வயதினிலே, முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

சொந்த வீடு: பாரதிராஜா முதன் முதலாக ஜெயலலிதா நடிக்க இருந்த படத்தைத் தான் இயக்க இருந்தாராம். அந்தப் படத்தின் பெயர் சொந்த வீடு. முத்துராமன் தான் ஹீரோ. இந்தப் படத்துக்காக ஜெயலலிதாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கினாராம். 28 நாள்கள் கால்ஷீட்டும் கிடைத்துள்ளது.

சின்னப் பையன்: ஆனால் படப்பிடிப்புக்கு கிளம்பும் நேரத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் ஜெயலலிதாவிடம் பாரதிராஜாவைப் பற்றிப் போட்டுக் கொடுத்து விட்டாராம். அவனுக்கு கிளாப் கூட அடிக்கத் தெரியாது. சின்னப் பையன். சரியா படம் எடுக்கத் தெரியுமான்னு தெரியலன்னு பீதியைக் கிளப்பி உள்ளார்.

16 வயதினிலே: இதனால் ஜெயலலிதாவும் நடிக்காமல் போனாராம். படமும் டேக் ஆப் ஆகவில்லை. அதன்பிறகுதான் 16 வயதினிலே என்ற படத்தில் அழகான கமலை அழுக்குப் படிந்த சப்பாணியாக நடிக்க வைத்து எடுத்துள்ளார். ஸ்ரீதேவி, ரஜனி, கவுண்டமணின்னு படம் களைகட்டி தமிழ்சினிமாவையே புரட்டிப் போட்டது.

15 முறை பார்த்த முதல் மரியாதை: முதலில் முடங்கிப் போன சொந்த வீடு படம்தான் பின்னாளில் ரேவதி நடித்த புதுமைப் பெண்ணாக மலர்ந்தது. பாரதிராஜாவின் இயக்கத்தில் முதலில் நடிக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு அவரது படங்கள் என்றாலே மிகவும் பிடிக்குமாம்.

அதிலும் அவர் இயக்கி சிவாஜி நடித்த முதல் மரியாதை படம் ரொம்பவே பிடித்துப் போனதாம். அதனால் அந்தப் படத்தை மட்டும் 15 முறை பார்த்துவிட்டாராம். அவரே பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் படத்தில் முதலில் நடிக்க மறுத்த ஜெயலலிதாவே அவரது படமான முதல் மரியாதையை 15 தடவை பார்த்தால் என்றால் அந்தப் படம் எவ்ளோ சூப்பராக இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top