எஸ்கே 25 டைட்டில் டீசர் வேறலெவல்!.. கடைசியில சொன்னதுதான் நடந்திருக்கு போலயே..

Published on: March 18, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் விஜய் டிவி மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது படிப்படியாக முன்னேறு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கின்றார். மெரினா திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கி சட்டை, ரெமோ, மாவீரன் எனத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறி இருக்கின்றார்.

அதிலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் இவரை டாப் நடிகர்களில் ஒருவராக மாற்றி இருக்கின்றது. இவர் கடந்த ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது.

இதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். சமீபத்தில் படத்தின் பூஜை முடிவடைந்து இருந்தது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

சமீப நாட்களாக படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் வெளியாகி வந்த நிலையில் இப்படத்திற்கு பராசக்தி என்கின்ற பெயரை வைக்க இருப்பதாக கூறி வந்தார்கள். இந்த டைட்டில் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளிவந்த டைட்டில் என்பதால் இதனை சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு வைக்கக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறினார்கள். எப்படியும் படத்தின் டைட்டில் தான் வெளியாகும் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எஸ்கே 25 திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கின்றது.

அனைவரும் எதிர்பார்த்தபடி படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. படம் டீசரை வைத்துப் பார்க்கும்போது 80’ஸ் காலகட்டங்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் போல ஒரு உணர்வை கொடுக்கின்றது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா, அதர்வா ஆகியோரின் கெட்டப் பழைய திரைப்படங்களை கண்முன் காட்டுவது போல் இருக்கின்றது. மேலும் சிவகார்த்திகேயன் ‘சேனை வேண்டும், எதற்கும் துணிந்த சேனை வேண்டும்’ என்று கூறும் வசனம் இந்த டீசரில் இடம் பெற்றிருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment