Connect with us

Cinema News

அடுத்த 3 வருடத்தில் எஸ்.கே. சம்பளம் எவ்வளவு தெரியுமா? பிரபலம் கணிப்பு

கமல் தயாரித்த அமரன் படம் சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்து விட்டது. படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுத்திருப்பார்கள். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் சிரத்தையுடன் பல பயிற்சிகளை எடுத்து நடித்துள்ளார்.

வசூல் வேட்டை: படம் முழுக்க அவர் மேஜராகவே வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் இவ்வளவு சூப்பராக நடித்து விட்டாரே அது எப்படி இவர் காமெடி கலந்து தானே நடிப்பார்? இவ்வளவு ஆக்ஷனில் கூட கனகச்சிதமாகப் பொருந்தி விட்டாரே என அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தினார். ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கமும் படத்தில் அவரது அபார உழைப்பைக் காட்டியது. படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

70 கோடி: அமரன் முடிஞ்சதுக்கு அப்புறம் சிவகார்த்திகேயன் எவ்வளவு சம்பளம் வாங்குறாருன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. அடுத்த படத்துக்கு 70 கோடி கேட்குறதாகவும் தகவல். அதுபற்றி என்ன சொல்றீங்கன்னு ஆங்கர் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மியிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

அமரன் படம் தமிழகத்தில் என்ன ஷேர் கொடுத்ததோ அதை வந்து சிவகார்த்திகேயனின் சம்பளமாக நிர்ணயம் பண்ணிருக்காங்க. எல்லா நடிகர்களும் இந்த வழியில தான் சம்பளத்தை நிர்ணயிப்பாங்க. அந்த அடிப்படையில் இவரும் 70 கோடின்னு வச்சிருக்காரு.

பழைய கமிட்மெண்ட்: அதே நேரம் இப்ப முருகதாஸ் இயக்கத்துல ஒரு படம் நடிச்சிக்கிட்டு இருக்காரு. இப்ப அந்தப் படம் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தால் அந்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துரும். சிவகார்த்திகேயனைப் பொருத்தவரைக்கும் ஏற்கனவே உள்ள கமிட்மெண்ட்தான். சுதா கொங்கரா, சிபிச்சக்கரவர்த்தி படமா இருக்கட்டும். அது பழைய கமிட்மெண்ட்தான்.

100 கோடி: புதிதாக அவர் கையெழுத்துப் போடற படங்களுக்கு 70 கோடில இருந்துதான் தொடங்கும். இன்னும் 2 அல்லது அதிகபட்சம் 3 வருடங்களுக்குள் 100 கோடியை அவரது சம்பளம் எட்டுவதற்கு வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா அவர் லைன் அப்ல உள்ளது எல்லாம் கமர்ஷியல் ஆகவும் பெரிய வெற்றியைத் தரும் என்று நம்பிக்கைக் கொடுக்கக்கூடியதாக இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top