Connect with us

latest news

bottle radha: குடிகாரனுங்களுக்குத்தான் வஞ்சகம் இல்லாத மனசாம்… பாட்டல் ராதா எப்படி இருக்கு?

நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இன்று வெளியாகி உள்ள படம் பாட்டல் ராதா. குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆல்கஹாலுக்கு அடிமையானவங்களுக்கு எதிராக மெசேஜ் சொல்ற படம்தான் இது.

படத்தோட ஒன்லைன்: குரு சோமசுந்தரம் கட்டட மேஸ்திரி. அவருக்கு சஞ்சனா நடராஜன் மனைவி. 2 பிள்ளைங்க உள்ள ஜாலியான குடும்பம். குரு சோமசுந்தரம் ஆல்கஹாலுக்கு அடிமையானவர். நைட் ஆனா ரகளை பண்ணுவாரு.

உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து அவரை குடிப்பழக்கத்தில் இருந்து மாற்றும் புத்துணர்வு முகாமுக்கு அனுப்புறாங்க. அங்கு அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தது? வெளியே எந்த நிலையில் வருகிறார் என்பதுதான் கதை.

ஓவர் ஆக்ட்டிங்: மனைவி, குழந்தைகள், உறவினர்களை அவரது குடிபோதை நடவடிக்கைகள் எப்படி பாதித்தது என்பதையும் தத்ரூபமாக சொல்லி இருக்கிறார்கள். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக குருசோமசுந்தரம் முதல் பாதியில் ஓவரா நடிச்சிட்டாரு. அதைத் தவிர்த்திருக்கலாம்.

காமெடி: கதாநாயகி சஞ்சனா மீது ரொம்ப பரிதாபம் வருகிறது. அந்தளவுக்கு அவர் யதார்த்தமாக நடித்துள்ளார். ஜான்விஜயின் கேரக்டரும், நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. இது பாசிடிவான ரோல். லொள்ளுசபா மாறன், பாரி இளவழகன் நம்மை அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். சீரியஸா போற படத்துக்குக் கொஞ்சம் காமெடியைக் கொடுத்து கலகலப்பூட்டுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனியும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். செகண்ட் ஆப்ல ஹீரோவுக்கு உதவுற இடம் டச்சிங்காக உள்ளது. டைரக்டர் தினகரன் சிவலிங்கம் குடிபோதைக்கு அடிமையானவர்களின் குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்கிற மெசேஜ் சொன்னதில் 50சதவீதம் வெற்றி அடைந்துள்ளார்னு சொல்லலாம்.

அரசியல்: குடிபோதையில் உள்ளவர்களின் மதிப்பு, அவர்களது உடல்நலம் குறித்த பரிதாபங்களும் படம் பார்க்கும் நமக்குத் தொற்றிக் கொள்கிறது. புத்துணர்வு முகாம்ல நடக்குற சீன்கள் எல்லாமே நமக்கு ஒரு புது அனுபவம்தான்.

மைனஸ்: அதுல அரசியலும் காட்டி இருப்பது டைரக்டர் டச். செகண்ட் ஆப் வந்ததுக்கு அப்புறம் கதை ‘இழு இழு’ன்னு இழுக்குது. படத்தில் என்ன மைனஸ்னா சில காட்சிகள் திரும்ப திரும்ப வந்த மாதிரி நமக்கு ஃபீல் ஆகுது.

படத்துல குருசோமசுந்தரம் சில இடங்களில் ஆணாதிக்கத்தையும் காட்டுகிறார் என்றே தோன்றுகிறது. அதைத் தவிர்த்திருக்கலாம். ஷான் ரோல்டனின் இசையில் சில பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆழமான மெசேஜோடு இந்தப் படம் வந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பா பண்ணிருக்கலாம்.

டயலாக்: படத்துல சங்க காலத்துல இருந்தே இந்தக் குடிப்பழக்கம் இருக்கு, குடிகாரனுங்களுக்குத் தான் வஞ்சகம் இல்லாத மனசு போன்ற டயலாக்குகள் வருவது டச்சிங்காக உள்ளது.படம் பார்த்தவர்கள் இதைப் பார்த்து ஒருத்தராவது திருந்துனால் சந்தோஷம்னு சொல்றாங்க.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top