Connect with us

Cinema News

போட்றா வெடிய… உண்மையாகும் தளபதி70.. இயக்குனர் வாய்ப்பு இவங்களுக்கு தானா?

Thalapathy70: நடிகர் விஜய் நடிப்பில் தளபதி70 திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் அறிவித்தார். தொடர்ந்து, தன்னுடைய கட்சி வேலைகளை கவனிப்பதற்காக நடிப்பில் இருந்து விலக இருப்பதாகவும் தகவலை தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டார்.

அப்போதே தான் ஒப்புக்கொண்ட திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி69 திரைப்படங்களை முடித்த கையோடு சினிமாவில் இருந்து விலகுவார் எனக் கூறப்பட்டது. இதில் கடைசியாக வெளியான கோட் திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

குளோனிங் விஜயை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படத்தின் கிளைமேக்ஸில் ஒரிஜினல் விஜயின் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். அந்த வில்லனுக்கு OG எனவும் வெங்கட் பிரபு பெயர் கொடுத்து இருப்பார். இதுபோலவே லியோ படத்தின் கிளைமேக்ஸிலும் விஜயிற்கு கமல் கால் செய்வார்.

அதை தொடர்ந்து பேட்டியில் கூட லோகேஷ் கனகராஜ் பிளாஷ்பேக் பொய் என்ற ரீதியில் பேசி இருப்பார். இதனால் இந்த இரண்டு படங்களுமே இரண்டாம் பாகம் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுகுறித்த ஒரு சுவாரஸ்ய அப்டேட் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் தன்னுடைய அரசியலுக்கு முன் இன்னொரு படத்தில் நடிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம். தளபதி70 உருவாகும் பட்சத்தில் அது வெங்கட் பிரபு அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் கூட விரைவில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் அரசியல் பயணத்தில் சமீபகாலமாகவே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகி வருகிறது. இந்த பிம்பம் தனக்கு வேறு மாதிரி ரூபத்தினை உருவாக்கி விடும் என்பதாலேயே விஜய் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Continue Reading

More in Cinema News

To Top