நார்மல் பீப்பிள் கிடையாதா?… நயன்தாராக்கு ஓவரா கூவுறாங்களே… இது என்னப்பா புது உருட்டு?

Published on: March 18, 2025
---Advertisement---

Nayanthara: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கலந்துக்கொண்ட ஃபெமி9 சர்ச்சையை தொடர்ச்சியாக உருவாக்கி கொண்டு இருக்கிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் சமீபத்திய காலமாக அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் தோல்வியை மட்டுமே தழுவியது. இதனால் அவர் தொடர்ச்சியாக புதிய பிசினஸ்களை தொடங்கி வருகிறார்.

அந்த வகையில் அவர் கடந்த ஆண்டு பெண்களுக்கான அழகு சாதனம் மற்றும் நாப்கின் பிராண்டான பெமி9ம் தொடங்கினார். இது தொடங்கப்பட்ட போதே சென்னை வெள்ளத்தில் போஸ்டர் உடன் நின்று விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இதன் முதலாம் ஆண்டு வெற்றி விழா மிக பிரம்மாண்டமாக நயன்தாரா தரப்பு கொண்டாடி இருக்கின்றனர். ஆனால் அதில் அவர்கள் செய்த ஒரு விஷயம் தான் தற்போது பெரிய அளவு சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. ஃபெமி9 விநியோகிஸ்தர்கள் மட்டுமல்லாமல் இன்ஸ்டா கிரியேட்டர்களையும் பெரிய அளவில் அழைத்தனர்.

இதனால் அவர்கள் வீடியோ போட்டு பிரச்சினை நடக்குமா என்பது நயன்தாரா தரப்பு முடிவா என்பது தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சி முடிந்த சில நாட்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஓவர் திமிர் காட்டியதாக சில இன்ஃப்ளுயன்சர்கள் வீடியோ போட்டு இருந்தனர்.

குறிப்பிட்ட நேரத்தை விட ஆறு மணி நேரம் காக்க வைத்து வந்ததும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் போது அவர்களை அலட்சியப்படுத்தியதும் பலரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் அப்பட்டமாக காட்டப்பட்டது. அப்போதே ஒரு நடிகைக்கு இவ்வளவு திமிர் ஆகக்கூடாது என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இன்புளுயன்சர் ஒருவர் மேம் சாதாரண பீப்புள் கிடையாது. அவங்க நம்மளுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. தயவு செய்து தள்ளி நில்லுங்க என கத்துகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நேரமானது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது இந்த விவாதம் நடந்து இருப்பதாகவும் இப்படி ஒரு இன்ப்ளூயன்சர் பேசும்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றும் சொல்லாமல் வேடிக்கை பார்ப்பதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment