அஜித்:
தமிழ் சினிமாவில் எக்காலத்துக்கும் போற்றப்பட கூடிய நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். எப்படி எம்ஜிஆரை இன்றுவரை நாம் நினைவுபடுத்தி அவரின் புகழை பறைசாற்றி வருகிறோமோ அதை போல விஜயகாந்தும் என்றென்றும் மக்கள் நெஞ்சில் வாழும் ஒரு மனிதராக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் விஜயகாந்த் இருக்கும் வரை அவரை ரசிகர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த மக்களுக்கு ஒரு சிறந்த அரசை கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டார் விஜயகாந்த். மக்களுக்கு தேவையான அனைத்தும் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் விஜயகாந்துக்கு கிடைக்க வேண்டிய அரியாசனம் கிடைக்காமல் போனது. அரசியலில் வந்து ஒரு பெரிய ஆளுமையாகதான் இருந்தார்.
ஆனால் அதைவிட சினிமாவில் அவருக்கு கிடைத்த புகழ் ஏராளம். ஒரு காலத்தில் அசைக்கவே முடியாத இரு பெரும் ஆளுமைகளாக இருந்த ரஜினி, கமலையே அசைத்து பார்த்தவர் விஜயகாந்த். திடீரென பூத்து குலுங்கும் மலர் போல் அவருடைய வளர்ச்சி,அந்தஸ்து என மடமடவென உயர்ந்தது. எந்தவொரு பொறுப்பாக இருந்தாலும் அதை திறம்பட ஏற்று வழி நடத்துக் கூடியவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் என்றால் தயாரிப்பாளர்களின் நடிகன் என்றுதான் சொல்வார்கள். அந்தளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு எந்த நேரத்திலும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்துபவர். பணத்தை ஒரு பொருட்டாக விஜயகாந்த் என்றைக்கும் பார்த்ததில்லை. அதனாலேயே இவரால் பல தயாரிப்பாளர்கள் நிம்மதியாக இருக்க முடிந்தது. பெரும்பாலும் இவருடைய சம்பளத்தை விட்டும் கொடுத்திருக்கிறார்.
இதை போல் சம்பளத்தை அதிகளவு விட்டுக் கொடுத்த நடிகராக இன்றைய காலகட்டத்தில் இருப்பவர் நடிகர் அஜித் என செய்யாறு பாலு கூறினார். எந்தவிதத்திலும் தயாரிப்பாளருக்கு நெருக்கடிகொடுத்ததே இல்லை அஜித். அதனால்தான் இரண்டு வருடங்களாக இழுத்தடித்த விடாமுயற்சி படத்தை தக்க நேரத்தில் ரிலீஸ் செய்தால்தான் லைக்காவை ஆபத்தில் இருந்து காப்பாற்றமுடியும் என கருதிய அஜித் குட் பேட் அக்லி டீமுடன் பேசி பொங்கல் தேதியை வாங்கினார் என செய்யாறு பாலு தெரிவித்தார்.
