Connect with us

latest news

அட காகிதம் தின்னும் மூடா!.. வாலியை திட்டி பாட்டு எழுதினாரா கண்ணதாசன்?!..

தமிழ்த்திரை உலகில் சில பாடல்களை வாலி எழுதினாரா, கண்ணதாசன் எழுதினாரா என்றே கண்டுபிடிக்க முடியாது. குழப்பம் வந்துவிடும். அந்த வகையில் எனக்கு அப்புறம் வாலி தான் என்றும் சொன்னார் கண்ணதாசன். நான் இறந்ததும் எனக்கு இரங்கல் கவிதை வாலிதான் எழுத வேண்டும் என்றும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார் கண்ணதாசன். அதே நேரம் வாலியை வறுத்தெடுக்கும் வகையில் பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

கண்ணதாசனைப் பொறுத்தவரை அனுபவம், இலக்கியம், எளிமை என்ற மூணும் கலந்த கலவைதான். ஒரு பாடல் முழுக்க முழுக்க வாலியை வறுத்து எடுத்துவிட்டாராம் கண்ணதாசன். இதை பேராசிரியர் சண்முகசுந்தரம் சொல்கிறார். எங்க பாப்பான்னு ஒரு படம். அதுல வர்ற பாட்டுக்கு எம்எஸ்வி. இசை அமைத்துள்ளார்.

இந்தப் பாட்டுல என்ன சூழல் என்றால் போலி கவிஞர்கள் வர்றாங்க. அவங்களை அடிச்சி உதைக்கிறாரு ரவிச்சந்திரன். நான்தான்யா ஒரிஜினல்னு பாடி சண்டையும் போடுறாரு. இந்தப் பாடலை டிஎம்எஸ் அருமையாகப் பாடியுள்ளார். நான் போட்டால் தெரியும் போடு. தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு என்று தான் பாடலே ஆரம்பிக்கிறது.

அதே பாடலில் இந்தக் கவிதையைக் குறை சொல்வோரைக் கழியால் அடிப்பேன் வாடா. ‘நீ கம்பனைப் படித்தவனாடா… அட காகிதம் தின்னும் மூடா…’ அப்படின்னு ரொம்ப அழகா பாட்டைப் போட்டுருப்பாரு. அதிலும் முதல் சரணத்தில், ‘அம்மென்னும் முன்னே ஆயிரம் பாட்டை அள்ளி அள்ளி வீசட்டுமா, அப்போதும் உனக்கு புரியாதிருந்தால் சொல்லி சொல்லி உதைக்கட்டுமா’ என்றும் பாடியிருப்பார்.

‘வல்லினம், மெல்லினம் நல்ல இடையினம் என்னும் கம்பை எடுத்து வெண்பா விருத்தம் என்னும் விதவிதமாக சொல்லை எடுத்து நான் போட்டால் தெரியும் போடு. தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு’ என்று கவியரசர் கண்ணதாசன் வரிகளைப் போட்டுள்ளார்.

அதுக்கு அப்புறம் எனக்கு வட்டார மொழியிலும் பாட்டு எழுத முடியும் என்று சொல்லி இருப்பார். ‘பட்டணத்து தமிழில் நைனா என்றால் அர்த்தம் என்ன கூறட்டுமா’ என்று போட்டு இருப்பார்.

‘பயில்வான் மொழியில் வஸ்தாத் என்றால் பொருள் என்ன காட்டட்டுமா? எதுகை மோனை உன் இடவலமாகக் கொடுக்கட்டுமா? அப்படின்னா என்ன உன் ரெண்டு பக்கமும் கோடு மாதிரி வரி வரியாகப் போடட்டுமா’ன்னு கேட்டுருப்பாரு.

எனக்கு இணையா வேறு யாரும் இருக்காங்களாங்கற மாதிரி இறுமாப்புடன் பாடல் எழுதியிருப்பாரு. இந்தப் பாட்டுல வாலியைத் தான் குறை சொல்லி இருக்கறதா சொல்றாங்க. அப்படி சொன்னா கூட அதுல இவ்ளோ தமிழ் இலக்கணங்களை வச்சி எழுதணும்னா அது கவியரசர் கண்ணதாசனால மட்டும் தான் முடியும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top