நைட் ஷூட்டிங்கில் வச்சு செய்த படக்குழு… வீட்டில் வந்து கதறி அழுத சாய் பல்லவி…

Published on: March 18, 2025
---Advertisement---

Sai Pallavi: நடிகை சாய் பல்லவி ரொம்பவே துறுதுறுவென இருக்கும் ஆள். ஆனால் அவரையே ஒரு படக்குழு கதறி அழுக விட்டு இருக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாய் பல்லவி. ஆனால் டைட்டிலை வெல்ல முடியாமல் பாதியிலேயே வெளியேறினார். அதை தொடர்ந்து தெலுங்கில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் சாய் பல்லவிக்கு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய சூப்பர்ஹிட் படமான மலர் டீச்சரை கொண்டாடி தீர்த்தனர். மலையாளத்தினை தொடர்ந்து தெலுங்கில் வரிசையாக வாய்ப்புகள் குவிந்தது. பிடா, ஷ்யாம் சிங்காராய் என வெற்றி படங்கள் நீண்டது. தமிழ் பெண்ணான சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

என்.ஜிகே, மாரி 2 உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தாலும் பல ஆண்டு இடைவேளைக்கு பின்னரே அமரன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்து ரெபேக்கா வர்க்கீஸாக நடிப்பில் மிரள விட்டு இருந்தார். தொடர்ந்து கோலிவுட்டில் அமரன் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதற்கு முக்கிய காரணமாக சாய் பல்லவியின் நடிப்பு காரணமாக சொல்லப்பட்டது. அவருக்கு பல வழிகளில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பொதுவாக சாய் பல்லவி பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் இல்லாதவராம். இதனால் நைட் ஷூட்டிங் என்றால் உடனே மறுத்து விடுவாராம்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஷ்யாம் சிங்கராய் படத்தில் அவர் வந்த பெரும்பாலான காட்சிகள் இரவில் தான் ஷூட் செய்யப்படுவதாக இருந்தது. இதனால் அவர் 30 நாட்கள் இரவு கால்ஷீட்டும் கொடுத்து இருந்தாராம்.

காலையில் தூங்காமல் ஒரு ஷூட்டிங், இரவில் இந்த ஷூட்டிங் என சாய் பல்லவியால் தூங்க முடியாமல் போனதாம். தன்னை குழந்தை போல பார்த்து கொள்ளும் படக்குழுவிடம் இதை சொல்லவும் தயங்கி இருக்கிறார்.

தூங்காமல் அழுத்தம் ஏற்பட வீட்டில் அமர்ந்து கதறி அழுக தொடங்கி விட்டாராம். இதை பார்த்த அவர் தங்கை பூஜா இதை படக்குழுவிடம் சொல்லிவிட்டாராம்.

அவர்களும் பதறி போய் அடுத்த 3 நாட்களுக்குள் அவர் காட்சிகளை விறுவிறுவென எடுத்துவிட்டு உடனே ஒரு பெரிய ப்ரேக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

Also Read : வைரமுத்து எழுதிய பாடலை முதலில் பாட மறுத்த எஸ்பிபி… ஆனா அதுதான் வேற லெவல் ஹிட்..!

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment