செகண்ட் மேரேஜுக்கு ரெடியாயிட்டாரோ! லண்டனில் இருந்து திரும்பிய தனுஷ்

Published on: March 18, 2025
---Advertisement---

தனுஷ்:

இன்று தனுஷ் லண்டனில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவரை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. லண்டனில் சமீபத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

அப்போது ஒரு சிறுமியுடன் தனுஷ் உரையாடிய வீடியோவும் புகைப்படமும் வைரலானது. அதுமட்டுமல்ல லண்டனில் சில கார்ப்பரேட் கம்பெனிகளுடனும் தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் வெளியானது. அதில் ஒரு கம்பெனி இளையராஜா பயோ பிக் படத்தை எடுக்க முன் வந்திருப்பதாக தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக தற்போது திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.

இவருடைய லைன் அப் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஏனெனில் அடுத்த இரண்டு வருடத்திற்கு மிகவும் பிஸியான நடிகராக திகழ்கிறார் தனுஷ். அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை இயக்குவதும் தனுஷ் தான். அதில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.

இதற்கு முன் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். அந்தப் படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் படத்தில் பிக் பாஸ் புகழ் ஏடி ஒரு பாடல் பாடியிருப்பதாக தெரிகிறது. அந்தப் பாடல் நாளை வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இதற்கெல்லாம் அடுத்தபடியாக இளையராஜா பயோபிக், ஹாலிவுட்டில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் ,அமரன் திரைப்பட இயக்குனருடன் ஒரு படம் என அடுக்கிக் கொண்டே போகிறது அவருடைய லிஸ்ட். இந்த நிலையில் இரண்டு வருடங்களாக இழுத்தடித்து வந்த அவருடைய விவாகரத்து பஞ்சாயத்தும் சமீபத்தில் தான் முடிவடைந்தது.

தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் இன்று லண்டனில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார் தனுஷ். அதில் அவர் மிகவும் ஸ்மார்ட் ஆக முன்பை விட மிகவும் இளமையாக காணப்படுகிறார் .இதை பார்த்ததும் ரசிகர்கள் என்ன தலைவா அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாயிட்டீங்களா என கேட்டு வருகின்றனர்.

Also Read: கட்சி தலைவர் தானே… போஸ் கொடுத்தா போதுமா..? விஜய்க்கு லியோனி சரமாரி கேள்வி


ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment