அக்னி நட்சத்திரம் படம் சந்தித்த சவால்… அப்புறமா அதுக்கு இவ்வளவு வரவேற்பா?

Published on: March 18, 2025
---Advertisement---

மணிரத்னம் படம் என்றாலே இருட்டுன்னு தான் சொல்வாங்க. ஆனால் அதே சமயம் அந்த இருட்டிலும் அவர் காட்டும் வெளிச்சக் கீற்றுகள் பார்ப்பதற்கு வெகு அருமையாக இருக்கும். அது அவரது பிராண்டாகவே சொல்லப்படுவதும் உண்டு.

அப்படி எடுத்துக் கொண்டால் அவரது பல படங்களைச் சொல்லலாம். நாயகன், அஞ்சலி, பம்பாய், தளபதி, அக்னி நட்சத்திரம், ராவணன், பொன்னியின் செல்வன் என வரிசையாக பல படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்தப் படங்களுக்குள் முக்கியமாக ஒளிப்பதிவு ஒரே மாதிரியாக இருக்கும். இவரது படங்களில் ஆரம்பத்தில் பி.சி.ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவுக்கான வேலையைச் செய்து வந்தார். அதுவும் கனகச்சிதமாக இருக்கும். அவரது ஒளிப்பதிவு பேசப்படும் வகையில் இருக்கும்.

மணிரத்னம் தயாரிப்பு, இயக்கம், திரைக்கதையாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் படங்களில் எல்லா கேரக்டர்களுமே சுருக்கமாக வசனம் பேசுவார்கள். அது ஒரு தடவை பார்த்தால் புரியாது. படத்தை இன்னொரு முறை பார்த்தால் தான் அடடா என்ன அழகாகப் பேசுகிறார்கள் என்று சிலாகிக்கத் தோன்றும்.

இதற்காகவே சிலர் ஒரு தடவைக்கு இருதடவையாக அவரது படத்தைப் பார்த்து ரசிப்பதும் உண்டு. அந்த வகையில் 1988ல் அவரது இயக்கத்தில் வெளியான படம் அக்னி நட்சத்திரம். படத்தில் பிரபு, கார்த்திக் ஆகியோருடன் அமலா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் வெகு அருமை. அதைக் காட்சிப்படுத்திய விதமும் அருமை. ஒரு பூங்காவனம், ரோஜா பூ, வா வா அன்பே, நின்னுக்கோரி வரணும், ராஜா ராஜாதி, தூங்காத விழிகள் ஆகிய முத்து முத்தான பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு ஒரு சவால் இருந்தது. அது என்னன்னு பார்ப்போமா…

akni natchathram

akni natchathram

அக்னி நட்சத்திரம் படத்தில் அமலா வரும் காட்சிகள் எல்லாமே சிறப்பாக இருக்கும். பாடல்களும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் படத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

இன்று மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படம் தமிழ்சினிமாவில் எந்தளவுக்குக் கொண்டாடப்படுகிறதோ அந்தளவுக்கு படத்தில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் கொண்டாடப்படுகிறது. தமிழ்சினிமாவைப் பொருத்தவரை ஆரம்பகால கட்டத்தில் எந்தப் புதுமையையும் அவ்வளவு ஈசியா ஏத்துக்க மாட்டோம். அப்படிப்பட்ட ஒரு சவாலை அக்னி நட்சத்திரமும் சந்திக்க நேர்ந்ததுஎன்பது தான் உண்மை.

அந்தப் படம் வெளியான சமயத்தில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு முறை பெருமளவில் விவாதிக்கப்பட்டது. இன்றைக்கு அதுவே மாறி பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவை எல்லோரும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment