Connect with us

Cinema News

புது துடைப்பம் கொஞ்சம் வேகமா இருக்கும்!.. சினிமால விஜய் மைனஸ்.. வரிஞ்சு கட்டிட்டு அடிக்கிறாங்களே!..

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். தொடர்ந்து சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கின்றார்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார். இதனால் தனது கட்சி தொடர்பான அனைத்து வேலைகளையும் மிகச் சிறப்பாக செய்து வருகின்றார். சமீபத்தில் கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையுமே மிக சிறப்பாக செய்திருந்தார் நடிகர் விஜய்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா:

நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருந்தார் அதில் திமுக கட்சியை எதிர்த்தும், அவர்கள் செய்யும் அரசியல் குறித்து விமர்சனம் செய்து மேடையில் தாறுமாறாக பேசியிருந்தார். இதை கேட்ட திமுக அமைச்சர்கள் பலரும் கடும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

தொடர் விமர்சனம்:

யார் இந்த விஜய் திமுக-வின் கட்டுப்பாட்டில் எங்கள் தலைவர் இருக்கிறார் என்று எப்படி பேசலாம். எங்கள் தலைவர் அறிவார்ந்த தலைவர் என்பது உலகத்துக்கே தெரியும். 35 வருடமாக அவர் எழுதி வைத்து படித்தார் என்று யாரையாவது சொல்ல சொல்லுங்கள். அப்படிப்பட்ட ஒரு தலைவரை நேத்து வந்த இந்த கூத்தாடி இப்படி பேசலாமா – ஆளூர் ஷாநவாஸ்

விஜய்க்கு அரசியல் தெரியவில்லை. இவரது மாநாட்டை விட விஜயகாந்தின் மதுரை மாநாட்டில் அதிக கூட்டம் கூடியது. ஒரு முறை கூட பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் துணிச்சல் இல்லாதவர் இந்த விஜய் – துக்ளக் ரமேஷ்

எந்த இயக்கத்திலும் ரொம்ப அதிவேகமாக பேசுகிறவன். அந்த இடத்தில் கடைசிவரை நீடிக்க மாட்டான். திராவிட இயக்கம் ஒருபோதும் மைனஸ் ஆகாது, பிளஸ் ஆகும் – கி வீரமணி

திரையுலகில் நடிகர் விஜய் மைனஸ் ஆனதால் அரசியலுக்கு வந்துள்ளார். திமுக கூட்டணி உறுதியாக இருக்கின்றது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். திரையுலகில் அவரின் படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் அரசியலுக்கு வந்திருக்கின்றார் விஜய் – ஆர்.எஸ். பாரதி.

திமுகவின் வரலாறு தெரியாமல் நேற்று முளைத்தவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். எல்லாம் காலகோளாறு.. புது துடைப்பம் கொஞ்சம் வேகமாக தான் பெருக்கும் என்பார்கள். சீக்கிரமாகவே தேய்ந்துவிடும். பின்னர் இருக்கும் இடம் தெரியாமல போய்விடும். அப்படித்தான் நடிகர் விஜய் – ஆர் எஸ் பாரதி

Continue Reading

More in Cinema News

To Top