Connect with us

latest news

இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே… விஜய் ஆண்டனியின் மார்கன் பட டிரெய்லர்…

Vijay Antony: விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பில் உருவாகி இருக்கும் மார்கன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழ் இசையமைப்பாளராக வெற்றி கண்டவர் விஜய் ஆண்டனி. அதை தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். நான் படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. பெரும்பாலும் சாதாரண கதையாக இல்லாமல் வித்தியாசமானதை தேர்வு செய்வார்.

ஒவ்வொரு கதையிலும் விஜய் ஆண்டனியின் தேர்வு எப்போதுமே புதிதாகவே இருக்கும். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனியின் நடிப்பில் மார்கன் படம் உருவாகி வருகிறது. லியோ ஜான் பவுல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கிரைம் திரில்லரில் உருவாகி இருக்கிறது.

விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷன், சமுத்திரக்கனி, பிரிகடா, தீப்ஷிகா, மகாநதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் படத்தின் இயக்குனரே எடிட்டராக இருப்பதால் டிரெய்லரே வித்தியாசமாக அமைந்துள்ளது.

போலீஸ் வேடத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் மெருகேற்றி பார்ப்பதற்கே பரபரப்பாக இருக்கிறது. முக்கியமாக படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கதையும் வித்தியாசமாக இருக்கும் என்பதை டிரெய்லர் காட்சிகளே நிரூபிக்கிறது.

வரும் ஜூன் 27ந் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்புகள் அதிகமாகி இருக்கிறது. மேலும், விஜய் ஆண்டனி தற்போது வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை கைவசம் வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top