Connect with us

Cinema News

எல்லாருக்கும் 2 லட்ச ரூபாய்… விஜய்க்கு ஐடியா கொடுக்கும் மன்சூர் அலிகான்…!

தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் விஜய். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறுவதையே தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். கட்சி மாநாட்டைக் கம்பீரமாக நடத்தினார்.

சினிமாவில் பீக்கில் இருக்கும் இந்த நேரத்தில் அதில் இருந்து வெளியேறி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்கு துணிச்சல் வேண்டும். இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தின் கதைகளம் அரசியல் சார்ந்து இருக்கும். விஜயின் அரசியலுக்கு அச்சாரம் போடும் வகையில் இருக்கும். பஞ்ச் டயலாக் நிறைய உள்ளது என படத்தைப் பற்றிய ஹைப் வந்தவண்ணம் உள்ளது. இந்தப் படம் வரும் 2026 ஜன.9ம் நாள் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

விஜய் இன்னும் சில நாள்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சியை வலுப்படுத்த உள்ளார். மாவட்டம் தோறும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி தனது தொகுதி எது என்பதை விரைவில் முடிவு செய்வார். அந்த வகையில் விஜய்க்கு நடிகர் மன்சூர் அலிகானும் தன் பங்கிற்கு ஒரு ஐடியாவை அவிழ்த்து விட்டுள்ளார். அது ஒர்க் அவுட் ஆனா தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். என்னன்னு பார்ப்போமா…

மக்கள் கையில் காசு இல்லாதது மிகப்பெரிய குறை. எந்த ஆட்சி வந்தாலும் சரி. அடுத்து விஜய் வருகிறாரா, ஓட்டு போடுற எல்லா குடும்பத்திற்கும் 2 லட்ச ரூபாய் ஃபிக்சட் டெபாசிட்ல போடுவோம். அதை வைத்து நீங்க வியாபாரம் பண்ணுங்க. அதுக்கு வரி இல்லை என்று தேர்தல் அறிக்கை விட வேண்டும் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

மகா கந்தன் இயக்கத்தில் பிரபு, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயுகுமார், வெற்றி. இமாம் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், கிருஷ்ணபிரியா உள்பட பலர் நடித்துள்ள படம் ராஜபுத்திரன். வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மன்சூர் அலிகான் ராஜபுத்திரன் என்ற ஆடியோ லாஞ்சில் பல விஷயங்களைப் பேசினார். அதில் ஒன்றுதான் மேலே சொன்ன ஐடியா. அவர் பேசினாலே அது பெரிய கேள்விக்குரியாகவும், சர்ச்சையாகவும்தான் இருக்கும். அப்படித்தான் இப்போதும் பேசி உள்ளார் என்றே தெரிகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top