
Flashback
அப்போ மாதிரி இப்பவும் நினைச்சியா? சிவகுமாரை வில்லனாக்கிய ரஜினி!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வந்தால் சினிமாவில் நுழைந்து 50 ஆண்டுகளைத் தொட்டு விட்டார் என்று சொல்லலாம். இது வெறும் 50 ஆண்டுகள் கிடையாது. 50 ஆண்டுகளாகத் தன்னை முன்னணி ஹீரோவாகத் தக்க வைத்துக் கொண்ட மாபெரும் செயல். அந்த வகையில் அவருடைய படங்களில் சில தனித்துவங்கள் குறித்து பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
ரகுபதி ராகவன் ராஜாராம் படத்துல விஜயகுமார், ஜெய்குமாருக்குப் பிறகு ராஜாராம் கேரக்டர்ல ரஜினிகாந்த் நடித்தார். அப்பவே எல்லாராலும் கவனிக்கப்பட்டது ரஜினியின் நடிப்புதான். அப்போ விஜயகுமாருக்கும், ரஜினிக்கும் போட்டி. பின்னால ரஜினிக்கு மாமனாரா, வில்லனான்னு எல்லாம் அவர் நடிக்க ஆரம்பிச்சிட்டாரு. அதே மாதிரி ஆரம்பத்துல பல படங்களில் சிவக்குமாருக்கு வில்லனாக ரஜினிகாந்த் நடித்தார்.
கவிக்குயில் படத்துல சிவகுமார் தான் ஹீரோ. ரஜினி ஸ்ரீதேவிக்கு அண்ணனா வருவாரு. கிட்டத்தட்ட வில்லன் மாதிரி ரஜினி வருவாரு. அப்புறம் காலம் மாறிப்போச்சு. புவனா ஒரு கேள்விக்குறி படத்துல ரஜினிதான் ஹீரோ. சிவகுமார் வில்லன்.

kavikuyil puvana oru kelvikuri
இந்தப் படத்துல முதல்ல ரஜினியைத் தான் வில்லனாக நடிக்கச் சொன்னாங்களாம். ரஜினி அந்தக் கேரக்டர்ல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம். உடனே வேற வழியே இல்லாம ரஜினியை ஹீரோவாகவும், சிவகுமாரை வில்லனாகவும் நடிக்க வைத்தார்களாம். சிவக்குமாரும் அதற்கு ஒத்துக் கொண்டாராம்.
ரஜினிகாந்தின் வளர்ச்சில பாலசந்தரின் படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. முதல் படம் அபூர்வ ராகங்கள், அப்புறம் தில்லுமுல்லு, மூன்று முடிச்சுன்னு ஒவ்வொரு படத்துலயும் தன்னோட தனித்துவத்தை நிரூபிச்சிக்கிட்டே இருப்பார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இவ்ளோ சாதனைகளைப் படைத்தும்கூட தனக்கு எந்த ஒரு விழாவும் எடுக்க வேண்டாம் என்று தன்னடக்கமாக சொல்லும் ரஜனி உண்மையிலேயே கிரேட்தான்.! ரஜினி என்ற அந்த மாபெரும் கலைஞனுக்கு விழா கொண்டாடினால்தான் ரசிகர்கள் திருப்தி அடைவார்கள் என்று இல்லை. ரஜினி படம் வந்தாலே அவரது ரசிகர்களுக்குத் திருவிழா தானே!