எந்த நோயும் வரக் கூடாதா? நம்பியார் ஃபாலோ பண்ணத பண்ணுங்க.. அது கஷ்டம்தான்

Published on: August 8, 2025
---Advertisement---

சினிமா உலகில் தனது வில்லத்தனமான நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் எம் என் நம்பியார். இவர் திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகத்தான் வாழ்ந்தார். படங்களில் பார்க்கும் பொழுது அவர் முகத்தில் சிரிப்பு இருக்காது. பேசும்போது நகைச்சுவை இருக்காது. எப்போதுமே கணீர் குரலில் ஒருத்தரை பார்த்து முறைப்பதும் கடுமையாக பேசுவதும் மாதிரியே நடித்திருப்பார் .

ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்லவராக நகைச்சுவை உணர்வு உள்ளவராக அன்பாக பழகக் கூடியவராகவும் இருந்தவர் நம்பியார். நடிகர் என்பதையும் தாண்டி ஆன்மீகத்தில் பயங்கர நம்பிக்கை உடையவர். அதிலும் குறிப்பாக பயங்கரமான ஐயப்ப பக்தரும் கூட. குருசாமியாக பல வருடங்கள் இவர் ஐயப்பன் சாமிக்காக மாலை போட்டு இருக்கிறார். இவரை ஃபாலோ செய்தே இன்று தமிழ் திரை உலகில் எத்தனையோ நடிகர்கள் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

படங்களில் சிகரெட் பிடிப்பதும் மது அருந்துவது மாதிரியான காட்சிகளிலேயே நடித்திருக்கிறார் .ஆனால் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு நல்ல ஆசானாக இருந்தவர் நம்பியார். அது மட்டுமல்ல தன்னுடைய கடைசி வாழ்நாள் வரை எந்த ஒரு நோயும் இல்லாமல் வாழ்ந்து மறைந்தவர் .அதற்கு ஒரே காரணம் அவர் மனைவி என அவரை சார்ந்த ஒருவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதாவது அவருடைய கடைசி காலம் வரை தன்னுடைய மனைவி சமைத்த சாப்பாட்டை மட்டுமே சாப்பிட்டாராம் நம்பியார். வெளியூர் படப்பிடிப்பு என்றாலும் தன்னுடன் அவருடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு போய் விடுவாராம். கடைசி காலம் வரை தன் மனைவி சமைத்த சாப்பாடுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தாராம் நம்பியார். அதுதான் அவருக்கு எந்த ஒரு நோயும் வராமல் இருப்பதற்கான காரணம் என அந்த நபர் கூறி இருக்கிறார்.

nambiar

nambiar

அது மட்டுமல்ல ஐயப்ப சாமிக்கு விரதம் இருக்கும் நாட்களில் ஒரே ஒரு பொழுது மட்டும்தான் சாப்பிடுவாராம். இரவு பால் இரண்டு பழங்கள் மட்டும் சாப்பிட்டு தூங்கி விடுவாராம். தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செலுத்தியவர் நம்பியார் என அந்த நபர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment