Connect with us

latest news

சூரியின் மாமனை ஓவர்டேக் செய்த சந்தானம்!.. செகண்ட் ஹாஃப் செம காமெடி.. டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்!

தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கண் கலங்க வைத்து செல்ல சூரி இந்த வாரம் மாமன் படத்தைக் கொடுத்துள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் கிஸ்ஸாவாக கொடுத்துள்ளார்.

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 பாணியில் ஹாரர் படங்களை ஸ்பூஃப் செய்யும் படமாகவே இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியிருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஏகப்பட்ட பேய் காட்சிகளை வைத்து அடுத்த அடுத்த ரவுண்டுக்கு செல்ல வைத்து சிரிப்பு மூட்டிய பிரேம் ஆனந்த் இந்த முறை விமர்சகர் மற்றும் அவரது குடும்பத்தையே ஹிட்ச்காக் இருதயராஜாக வரும் நம்ம செல்வராகவன் தூக்கிக் கொண்டு போய் ஒரு படத்துக்குள் போட அங்கே இருந்து ஹீரோ எப்படி எஸ்கேப் ஆகிறார் என்பதையும் தனது குடும்பத்தையும் காதலையும் காப்பாற்றினாரா என்பதையும் கதையாக வடிவமைத்துள்ளார்.

படத்திற்குள் ஹீரோவாக வரும் கெளதம் மேனன், ஹீரோயினாக வரும் யாஷிகா ஆனந்த் ரொமான்ஸ் எல்லாமே செம காமெடி. கஸ்தூரி வழக்கம் போல அதிகமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். நிழல்கள் ரவி எல்லாம் எப்பேர்பட்ட வில்லன் தெரியுமா? அவரையும் சந்தானம் தேவயானி புருஷன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்.

சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காம்பினேஷன் தில்லுக்கு துட்டு படத்தில் இருந்து டிடி நெக்ஸ்ட் லெவல் வரை பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. லொள்ளு சபா மாறனை டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தியளவுக்கு இதில் பெரிதாக பயன்படுத்தவில்லை. ரெடின் கிங்ஸ்லி ஃபேனில் சுற்றுவது, தலைகீழாக நடப்பது என கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

முதல் பாதியில் இந்த படமும் கதையை நோக்கி நகர்வதால் இடைவேளைக்கு முன்பு தான் மஞ்சுமெல் பாய்ஸ் காமெடியை வைத்து ஓட்டிய இயக்குநர், இரண்டாம் பாதியில் மீண்டும் டிடி ரிட்டர்ன்ஸ் ரூட்டை கையிலெடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார். அதிலும், அந்த ஸ்லோமோஷன் சீனெல்லாம் செம மேட்டர்.

நடிகர் ஆர்யா நண்பன் சந்தானத்தை நம்பி போட்ட காசு கோவிந்தா சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து விடும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் சம்மருக்கு ஏற்ற சிரிப்பு சரவெடி.

ரேட்டிங்: 3.25/5

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top