Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
கோமதி தன் மகள் அரசியிடம் பேசிவிட்டு உள்ளே செல்கிறார். அப்போ சுகன்யா அரசியிடம் அப்போ காதல் எல்லாம் அவ்வளவு தானா எனக் கேட்க அரசி நான் இப்போ தான் சரியா இருக்கேன். என்னை குழப்பாதீங்க என திட்டி விட்டு செல்கிறார்.
அப்போ அரசிக்கு சதீஷ் கால் செய்ய இருவரும் முகூர்த்த புடவை எடுப்பது குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். சதீஷ் உனக்கு பிடிச்ச மாதிரியே நீ எடுத்துக்கோ என்கிறார். பின்னர் மயிலை கல்லூரிக்கு சரவணன் அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்.
மேப்பை பார்த்து அந்த கல்லூரி வாசலுக்கு வர தங்கமயில் தயங்கி கொண்டே இருக்கிறார். ஆசிரியர்கள் எதாவது பிரச்னை பண்ணுவாங்க என மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருக்க மயிலை வலுக்கட்டாயமாக வாசல் வரை அழைத்து செல்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் தங்கமயில் சரவணனை நிறுத்தி நான் கல்லூரி படிக்கவே இல்லை எனக் கூறுகிறார். படித்தது பன்னிரெண்டாவது மட்டும் தான் என உண்மையை கூற சரவணன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். தங்கமயில் அழுதுக்கொண்டு இருக்கிறார்.
பெண் பார்க்கும் சமயத்தில் நடந்த விஷயத்தையும் யோசித்து தங்கமயிலிடம் கேட்க உங்க அப்பா, அம்மாவும் அன்னைக்கு சொன்னாங்களே எனக் கேட்க டிகிரி படிக்கலைனா வரன் போகிடும்னு அப்படி சொல்லிட்டாங்க என்கிறார். சரவணன் என்னையே ஏமாத்திட்டீங்களே என்கிறார்.
இதே நீ ஸ்கூலில் மாட்டி இருந்தா என்ன நடக்கும். பொய் சொன்னதுக்காக நீ ஜெயிலுக்கு போயிருப்ப எங்க அப்பாவும் ஜெயிலுக்கு போயிருப்பாரு என்கிறார். நீ இனிமே என்னிடம் பேசக்கூடாது எனக் கூற தங்கமயில் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் சரவணன் மயில் சொன்னதை கேட்காமல் பைக்கை எடுக்க செல்கிறார். அவர் காலில் விழுந்து கேட்காமல் வண்டியை எடுத்து சென்று விட தங்கமயில் அழுதுக்கொண்டே இருக்கிறார்.
சரவணன் தன்னுடைய கல்யாணம், ஹனிமூனில் நடந்ததை யோசித்து கொண்டு இருக்கிறார். வரிசையாக சரவணனிடம் மயில் சொன்ன பொய்களையும் யோசித்து கோபமாக இருக்கிறார்.
