தம்பதிகளுக்கு ஸ்பெஷல் விருந்து வைக்கும் விஜய்.. ஐசரி கணேஷ் இல்ல திருமணத்திற்கு வராதது ஏன்?

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா தயாரிப்பாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். அவருடைய தந்தை ஐசரி வேலன் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அவரும் மிகவும் பிரபலமானவராக இருந்தவர். பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஐசரி வேலன். அவரை பின்பற்றித்தான் ஐசரி கணேஷும் இப்போது தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

வேல்ஸ் இண்டர்நேசனல் என்ற பெயரில் பெரிய கல்வி நிறுவனத்தை நிறுவி பல மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறார். இவருடைய தயாரிப்பில் பல வெற்றிப்படங்கள் வெளியாகியிருக்கின்றது. தற்போது கூட நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை தயாரித்து வருகிறார் ஐசரி கணேஷ். இந்த நிலையில் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

அந்த திருமணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அரசியல் தலைவர்களும் பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரில் இருந்து அனைத்து வகை துறையிலும் பிரபலமாக இருக்கும் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் சமீபகாலமாக எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் விஜய் ஐசரி கணேஷ் இல்ல திருமணத்திலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருடைய அப்பா, அம்மா ஆகியோர் வந்திருந்தனர். அவருடைய கட்சி சார்பாக ஆதவ் அர்ஜூனா வந்திருந்தார். வரவேற்பு நடந்த அன்று இரவு 7 மணிக்கு விஜய் வருவதாக இருந்தாராம். ஆனால் அங்குள்ள கூட்டத்தை பார்த்துதான் விஜய் வருவது ரத்து ஆகியிருக்கிறது. ஏனெனில் 15000 அழைப்பிதழ்கள் கொடுக்கபட சுமார் 25000 பேர் அந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

isari ganesh

isari ganesh

அதனால் நகர கூட முடியாமல் அனைவரும் தவித்திருக்கின்றனர். இதற்கிடையில் விஜயும் வந்தால் இன்னும் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தினால்தான் அவர் வருவதை நிறுத்திவிட்டாராம். அதற்கு பதிலாக தன்னுடைய வீட்டில் ஒரு நாள் புதுமணத்தம்பதிகளுக்கு ஸ்பெஷல் விருந்து வைப்பதாக கூறியிருக்கிறாராம் விஜய்

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment