Connect with us

latest news

Siragadikka Aasai: கதிரை வசமாக பிடித்த முத்து… திமிர் பேசும் ரோகிணி… என்னா பேச்சு இதெல்லாம்?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

ரோகிணிக்கு கால் செய்யும் சிட்டி முத்துவோட கார் சாவி 15 நிமிசம் வேண்டும் என்கிறார். முதலில் அதற்கு தயங்குகிறார் ரோகிணி. ஏற்கனவே நான் நிறைய பிரச்சினைகளில் இருக்கிறேன். என்னை எதற்கு இதில் மாட்டி விடுறீங்க என ரோகிணி சிட்டியிடம் சத்தம் போடுகிறார்.

ஆனால் சிட்டி ஏற்கனவே முத்து உங்களுக்கு நிறைய பிரச்சனை தரான். அந்த பிஏவும் திரும்பி வந்துட்டா உங்க நிலைமை இன்னும் மோசம் ஆயிடும் என ரோகிணியை குழப்பி சம்பந்தம் வாங்கி விடுகிறார். வித்யா மற்றும் முருகன் இருவரும் 25 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வாங்க இருக்கும் வீட்டிற்கு வருகின்றனர்.

பின்னர் கதிர் மற்றும் அவர் மனைவியுடன் வர எங்களுக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தங்க வரணும் அவங்க கையால பணம் கொடுக்கிறோம் என முருகன் கூறிவிடுகிறார். உடனே அவர் மனைவி சம்மதித்து கதிரை நைசாக வெளியே அழைத்து சென்றுவிடுகிறார். முத்துவிற்கு கால் செய்து முருகன் புது வீட்டிற்கு வர கூறுகிறார்.

அவர் வர பணத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கதிரும் வீட்டிற்குள் வர பணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது முத்து மற்றும் மீனா அவரைப் பார்த்து விடுகின்றனர். கோபமான முத்து அவரை அடி சரமாரியாக வெளுத்து விடுகிறார்.

#image_title

தப்பிக்க முயன்ற வரையும் தடுத்து பிடித்து அடி வெளுக்க அவர் தடுமாறுகி்றார். எங்க அண்ணன்கிட்டேந்து அடிச்சிட்டு போன காசு எங்க எனக் கேட்க செலவாகிவிட்டதாக கூறுகிறார். 30ட்சமும் எப்படி செலவாகும் என கேட்க சிங்கப்பூர் மலேசியா போனதாக சொல்கிறார். அருகில் இருக்கும் முருகன் அங்க போனாலும் அவ்வளவு செலவாகாது என்கிறார்.

உடனே முத்து போலீசுக்கு கால் செய்து கூறிவிடுகிறார். பின்னர் மனோஜ் மற்றும் ரோகிணிக்கு கால் செய்து கதிரை பிடித்து விட்டதாக கூறி அட்ரஸ் அனுப்பி அங்கே வர கூறுகிறார். முருகன் என்னை காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ் அண்ணா என முத்துவிடம் கூற அவர் உனக்கு தான் நன்றி சொல்லணும் என்கிறார்.

பின்னர், ரோகிணி மற்றும் மனோஜ் வர அவர்களும் கதிரை அடித்துக் கொண்டிருக்கின்றனர். வித்யாவிடம் நீ எங்க என ரோகிணி கேட்க நாங்க தான் இந்த வீட்டை வாங்க இருந்தோம் இவன் எங்க கிட்டயும் ஏமாற்றி இருப்பான் என்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் உள்ளே வந்து விடுகிறது.

மனோஜ் அவனிடம் காசினை வாங்கி தாங்க என கேட்க இன்னுமா வச்சிருப்பான் செலவு பண்ணி இருப்பான் என்கிறார் காவல் அதிகாரி. இதைக் கேட்ட மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர். வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்களை முத்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அங்க நின்று இருந்த ரோகிணி அவனை அடித்து கேட்கிற இடத்தில் கேட்டிருந்தா காசை கொடுத்திருப்பான். இவங்க தான் அவசரப்பட்டு போலீஸை அழைச்சிட்டாங்க என்கிறார். அண்ணாமலை அதுதானே சரி என்கிறார்.

நம்ம கேட்கிற முன்னாடி போலீஸுக்கு போனது தப்பு. இவங்க வேணுமுனே தான் இதை செய்தார்கள் என ரோகிணி பேச நல்லது பண்ணதுக்கு இதெல்லாம் பேச்ச என்ற ரீதியில் மீனா நின்று கொண்டு இருக்கிறார்.

Continue Reading

More in latest news

To Top