Connect with us

Cinema News

காலமானார் புலியூர் சரோஜாவின் கணவரும் நடிகருமான சீனிவாசன்.. திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் நடிகர் ஜி. சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 96. இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரத்யேக உடல் தோற்றமும் கம்பீரமான குரலும் விரிந்த கண்களும் கொண்டவர். பார்த்ததுமே அனைவரும் பிரமிக்கவைக்கும் உடலமைப்பை கொண்டவர். தெள்ளத்தெளிவான பேச்சு, அழகிய தமிழ் நடை , தமிழ் உச்சரிப்பு, வசனங்களில் தெளிவு என சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் ஜி. சீனிவாசன்.

கிராமத்து தலைவராக, வில்லனாக, குணச்சித்திர கேரக்டராக என பல வேடங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் சீனிவாசன். புதிய வார்புகள், திசை மாறிய பறவைகள், பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் இவரின் கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டது.

ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரமும் விதவிதமான கெட்டப்புகளையும் போட்டு திரைக்கலைஞர்களையே ஆச்சரியப்பட வைத்த பன்முக கலைஞர்தான் இந்த சீனிவாசன். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் எழுத்தாளருமாக விளங்கினார்.

நீதிபதி பக்தவச்சலத்தின் உறவினர்தான் சீனிவாசன். திரையுலகில் மறக்க முடியாத ஒரு கலைஞராக மாறினார் சீனிவாசன். இவருடைய பூர்வீகம் தஞ்சையில் உள்ள ஒரு சிற்றூர். இவருடைய பெற்றோர் விவசாயம் பார்த்து வந்தனர். சிறுவயதில் இருந்தே கலையின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் பள்ளி கல்லூரி படிப்பை தஞ்சையிலேயே ஆரம்பித்தார். பள்ளியில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு எண்ணற்ற பரிசுகளை வென்றார்.

அதன் காரணமாக படிப்பிலும் படு சுட்டியாகவும் விளங்கினார். அவள் ஒரு காவியம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சீனிவாசன். இப்படி சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த சீனிவாசன் பாரதிராஜாவின் இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் படத்தில் மருது என்ற கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார்.

இவருக்கும் புலியூர் சரோஜாவுக்கும் பிறந்த ஒரே மகன் எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் மரணமடைய அதிலிருந்தே சீனிவாசன் நிலைகுழைந்து போனார். அதன் பிறகு தனதுமகன் சத்யா பெயரில் ராமாவரத்தில் சத்யம் மெட்ரிக்குலேஷன் பள்ளியை உருவாக்கி நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் 96 வயதாகும் சீனிவாசன் இன்று காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top