Connect with us

Cinema News

இருந்தது பிறந்தது எல்லாம் சொந்த வீடுதான்.. ஆனா இப்போ? உருக்கமாக பேசிய ரவிமோகன்

சில நாள்களாக ஒட்டுமொத்த மீடியாவுமே ரவிமோகன் மீதுதான் திரும்பியிருந்தது. அதற்கு காரணம் தன் காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக திடீரென அவர் அறிவித்தார். அதிலிருந்தே கோடம்பாக்கம் மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆர்த்தி தரப்பிலிருந்தும் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது. மாறி மாறி இருவரும் அறிக்கையை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

ஆர்த்தி தரப்பிலிருந்து கூறும் போது தங்கள் வாழ்க்கையில் மூன்றாவது நபர் உள்ளே வந்த பிறகு எங்களுக்குள் பிரிவு என்பது ஏற்பட்டதாக தெரிவித்தார். அந்த மூன்றாவது நபர் பிரபல கென்ய பாடகி கெனிஷாதான் பெரும்பாலும் கூறப்பட்டது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ரவிமோகனும் கெனிஷாவும் ஒன்றாக கை கோர்த்தப்படி வந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் தானும் கெனிஷாவும் ஹீலிங் செண்டரை ஆரம்பிக்கப் போவதாகவும் ரவிமோகன் தெரிவித்தார். இப்படி ரவிமோகனின் செயல்பாடுகள் ஆர்த்திக்கு கடுப்பை ஏற்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக தன் உடைமைகளை வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு இப்போது தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார் ரவிமோகன். ஏன் தன் வீட்டை மாப்பு போட்டு தானே சுத்தம் செய்யும் வீடியோவையும் ரவிமோகன் வெளியிட்டார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் சரத்குமார் நடிப்பில் ஜூலை 4 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 3 BHK திரைப்படம். இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்க்க திரைப்பிரபலங்கள் ஒரு சில பேர் வந்தனர். அதில் ரவிமோகனும் அழைக்கப்பட்டார். படம் பார்த்த ரவிமோகன் பிறந்ததும் சொந்தவீடுதான். இருந்ததும் சொந்த வீடுதான். வாடகை வீட்டில் இதுவரை இருந்ததே இல்லை.

ஆனால் இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பேசியிருந்தார் ரவிமோகன். ரவி மோகன் நடிப்பில் அடுத்து எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக பராசக்தி திரைப்படம் அமைந்துள்ளது. அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ரவிமோகன். அதுமட்டுமில்லாமல் கராத்தே பாபு படத்திலும் நடித்து வருகிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top