மனைவியுடன் விவாகரத்து!. நடிகையுடன் கிசுகிசு?!. கிருஷ்ணா செய்த லீலைகள்!..

Published on: August 8, 2025
---Advertisement---

Actor Krishna: அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின் தம்பிதான் கிருஷ்ணா. இவரின் முழுப்பெயர் கிருஷ்ணா குலசேகரன். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர். இதுபோக இருவர், உதயா போன்ற படங்களில் சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் அலிபாபா. ஆனால், 2012ம் வருடம் வெளியான கழுகு திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதேபோல், ஹாரர் காமெடி படமாக வெளிவந்த யாமிருக்க பயமேன் படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அந்த படங்களுக்கு பின் வானவராயன் வல்லவராயன், யட்சன், யாக்கை, பண்டிகை, நிபுணன், விழித்திரு, வீரா, களறி என பல படங்களிலும் ஹீரோவாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் கழுகு 2, ராயர் பரம்பரை ஆகிய படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில்தான் ஸ்ரீகாந்தை தொடர்ந்து போ..தைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கிருஷ்ணாவை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இரத்த பரிசோதனையில் அது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் செல்போன் மூலம் போ..தை மருந்து சப்ளை செய்பவர்களிடம் அவர் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்யவிருக்கிறார்கள்.

கிருஷ்ணா ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். வன்மம் என்கிற படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகியோடு கிருஷ்ணாவுக்கு நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு வெளியானது. இதுதான் அவரின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்தில் முடிந்ததாக சொல்லப்பட்டது. அதோடு, அந்த நடிகையை கிருஷ்ணா 2வது திருமணம் செய்து கொள்ளப்போகிறார் எனவும் செய்திகள் வெளியானது.

ஆனால், கிருஷ்ணா அதை மறுத்தார். அதேநேரம், இந்த வருடம் 6ம் தேதி கிருஷ்ணா 2வது திருமணமும் செய்து கொண்டார். ஆனால், அவர் யார் என்கிற தகவல் வெளியாகவில்லை. இப்போது போ..தைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் சிறையில் அடைக்கப்படுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment