
Flashback
சகலகலாவல்லவன் மேஜிக்: நேத்து ராத்திரி யம்மாவான்னு சொன்னாங்க… ஆனா அவங்க பிள்ளைகளே சூப்பர்னாங்க!
1982ல் ஏவிஎம் தயாரித்த பக்கா கமர்ஷியல் படம் சகலகலாவல்லவன். எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். கமல், அம்பிகா, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அப்போது சூப்பர் டூப்பர்ஹிட்டானது. அந்தப் படத்துல ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘நிலா காயுது’ன்னு எல்லாம் இளசுகளை உசுப்பேத்துற மாதிரியான பாடல் இருக்கும். அதிலும் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடலில் சில்க படுகவர்ச்சியாக டிரஸ் பண்ணிக் கொண்டு கமலுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருப்பார்.
அதே போல ‘நிலா காயுது’ பாடலில் மூடேத்துற மாதிரி இடையில் ஹம்மிங் வரும். அந்தக் காலத்தில் இவ்ளோ பெரிய தயாரிப்பு நிறுவனம், கமல், அம்பிகா நடிச்சது, இப்படி ஒரு சில்க் பாட்டு தேவையான்னு கேள்வி எழுப்பி இருப்பாங்களேன்னு தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணனிடம் ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அந்தப் படம் எடுக்கும்போது கமர்ஷியல் பிக்சர்தான் என்பது மைன்ட்ல வந்தாச்சு. ஏவிஎம் கார்டன்ல தான் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு எடுத்தோம். கமர்ஷியலான விஷயம்தான் பண்றோம்னு புரிஞ்சி தான் அந்தப் பாட்டை எடுத்தோம். அதே மாதிரி தான் ‘நிலா காயுது, கட்டவண்டி’ பாட்டு எல்லாம் எடுத்தோம்.

sagalakala vallavan
இது கமர்ஷியல் படம். இதை ஹைகிளாஸ் மக்கள் ரசிப்பாங்கன்னு நினைக்க முடியாது. பால்கனில இருந்து பார்க்குறவங்க ‘இதெல்லாம் ஒரு படமா..’ன்னுதான் சொல்லிட்டுப் போவாங்க. ஆனா அதை எல்லாம் நினைக்காம இந்தப் படத்தை கமர்ஷியல் பிக்சர்னு டிசைடு பண்ணித்தான் எடுக்குறோம். ஆனா எல்லாத் தரப்பு மக்களும் ரசிச்சாங்க.
முதல்ல சொல்றவங்க எல்லாம் அன்னைக்கு அதாவது ஒரு சாரார் சொல்லும்போது என்ன இதுன்னு சொன்னாங்க. ஆனா அவங்களோட பிள்ளைங்க, பிரண்ட்;ஸ் எல்லாம் படத்தைப் பார்த்துட்டு வந்து ரொம்ப நல்லாருக்குன்னு சொல்வாங்க. திருப்பியும் பார்ப்பாங்க. இல்லன்னா டெலிவிஷன் இருந்தா போட்டுப் பார்ப்பாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.