Connect with us

Cinema News

அந்த வீடு மாதிரியே இருக்கணும்!.. நடிகரின் வீட்டை பார்த்து வீடு கட்டிய விஜய்!..

Actor Vijay: 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருபவர் விஜய். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்தாலும் ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி மாஸ் ஹீரோவாக மாறினார். சின்ன வயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனர் என்பதால் தானும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ராஜபார்வை, பூவே உனக்காக போன்ற படங்கள் மூலம் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார். காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி போன்ற படங்களின் வெற்றி விஜயை கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாற்றியது.

ஒருகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார். அதோடு, அவரின் படங்கள் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ய துவங்கியது. கடைசியாக வெளியான கோட் படம் கூட 400 கோடி வசூலை தாண்டியது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பின் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என சிலர் சொல்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலை விஜய் குறி வைத்திருக்கிறார். தனது கட்சிக்கு மக்கள் என்ன ஆதரவு கொடுக்கப்போகிறார்கள் என்பது தெரிந்தபின்னரே சினிமாவில் நடிப்பதா வேண்டாமா என விஜய் முடிவு செய்வார் என்கிறார்கள்.

பல வருடங்களாகவே விஜய் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்தான் பெற்றோருடன் வசித்து வந்தார். அதன்பின் அப்பாவோடு பிரச்சனை ஏற்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை பகுதியில் வீடு கட்டி குடியேறினார். இப்போது அந்த வீட்டில் விஜய் தனியாகவே வசித்து வருகிறார்.

இந்த வீட்டின் மதிப்பு சுமார் 80 கோடி என சொல்லப்படுகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் புளோரிடா கடற்கரையில் ஒரு வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டின் நேர்த்தியான வடிவமைப்பு பிடித்துப்போய் அதுபோலவே தனது வீடும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு இந்த வீட்டை கட்டியிருக்கிறாராம்.

Continue Reading

More in Cinema News

To Top