Connect with us

latest news

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 போட்டியாளர்கள் இவர்களா? விஜய் பிபி பிரபலத்தையும் தூக்கிட்டாங்களே…

TopCookuDupeCooku: சன் டிவியில் பிரபல தொடராக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக்கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த ஆச்சரிய தகவல்கள்.

ஐந்தாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் மற்றும் நடுவரான வெங்கடேஷ் பட் வெளியேறினர். இதை தொடர்ந்தே சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியினை ஒளிபரப்பினர். இதன் முதல் சீசனில் பெரிய அளவில் பிரபலமான பிரபலங்கள் இல்லை.

சன் டிவியின் நடிகைகளான சைத்ரா ரெட்டி, மனிஷா உள்ளிட்டோர் மட்டுமே இருந்தனர். இதில் விஜய் டிவியில் இருந்து டூப் குக்குகளான அதிர்ச்சி அருண், பரத், ஜிபி முத்து, தீனா, மோனிஷா பிளஸி, சவுந்தர்யா உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

முதல் சீசனில் யூட்யூப் பிரபலமான நரேந்திர பிரசாத் டைட்டில் வின்னராகினார். இந்நிலையில் குக் வித் கோமாளியை போல அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதில் இருந்த சுவாரஸ்ய இதில் ஏற்படவில்லை. வெங்கடேஷ் பட் கூட விஜய் டிவியில் இருந்தது போல இல்லாமல் இருந்து இருக்கிறார்.

இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் சீசன் முடிந்த நிலையில் இரண்டாவது சீசன் குறித்து எந்த விவரமும் வெளியிடப்படாமல் இருந்தது. குக் வித் கோமாளியின் ஆறாவது சீசனுடன் தொடங்கியது டாப் குக்கு டூப் குக்கு முதல் சீசன்.

இந்நிலையில் குக் வித் கோமாளி ஆறாவது சீசன் தொடங்கப்பட்டு 8 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது சீசன் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதில், விஜய் டிவியில் இருந்து இனியா சீரியல் மூலம் தமிழுக்கு வந்த ஆலியா மானசா, ஆனந்த ராகம் தொடர் அழகப்பன், அனுஷா பிரதாப், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தீபக் உள்ளிட்டோரும் டாப் குக்கு டூப் குக்கு இரண்டாவது சீசனில் கலந்துக்கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading

More in latest news

To Top