Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரின் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

கதிர் மற்றும் ராஜி பேசிக் கொண்டிருக்கின்றனர். எங்க அப்பா இப்போ என்ன வைஃபை கொடுமைப்படுத்துறவன நினைத்திருப்பார் எனக் கூற ராஜி அந்த வார்த்தையை கேட்டு சந்தோஷப்படுகிறார். பின்னர் மீனா தன்னுடைய அறையில் அலுவலக பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது அங்கு வரும் செந்தில் வேலை கிடைத்தால் நானும் இது போல தானே பார்க்க வேண்டும் எனக் கூறுகிறார். என்ன வேலை கிடைக்கும்னு யாருக்கு தெரியும் என மீனா கூற நீ உங்க அப்பா கிட்ட எதுவும் விசாரிக்கவில்லையா என்கிறார். காசு கொடுத்தால் தான் வேலை என சொல்ல உடனே அதை பற்றி நான் விசாரிக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார் மீனா.

மீனா எடுத்த பணத்தை எப்ப வைப்பீங்க என கேட்க, எனக்கு வேலை கிடைக்கும் நான் காசை பத்திரமாக வைத்து விடுவேன் எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனக் கூறுகிறார் செந்தில். அடுத்த நாள் காலை வீட்டில் இருப்பவர்கள் பேசிக் கொண்டிருக்க சதீஷின் அப்பா மற்றும் அம்மா உமையாள் இருவரும் பாண்டியன் வீட்டிற்கு வந்து சத்தம் போடுகின்றனர்.

உன்னை நம்பி என் மகனை உன் பெண்ணிற்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடிவெடுத்தோம். ஆனால் நீயோ இன்னொருத்தன் லவ் பண்ணின பொண்ணை எங்க தலையில் கட்டப்பாத்திருக்க என சத்தம் போட்டுவிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ததால் ஏற்பட்ட செலவை கேட்கின்றனர்.

எல்லாரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். நாங்களும் செலவு பண்ணி இருக்கோமே எனக் கேட்க அது உங்க தலையெழுத்து. நாங்க என்ன பண்ண முடியும். பெரிய செலவை இழுத்து வச்சி இருக்கோம் என உமையாள் சத்தம் போட பாண்டியன் நானே அந்த பணத்தினை கொடுத்து விடுவதாக சொல்கிறார்.

எப்ப தருவ எனக் கேட்க பாண்டியன் வந்து கொடுத்துடுறேன் எனக் கூற நீ வரக்கூடாது. நானே வந்து வாங்கிக்கிறேன் என்கிறார். சாயந்திரத்துக்குள் காசினை தருவதாக பாண்டியன் ஒப்புக்கொள்கிறார். செந்திலும் பேங்கில் இருந்த பணத்தினை எடுத்து வரக்கூறுகிறார்.

இதனால் செந்தில் அதிர்ச்சியாகி ரூமில் புலம்பிக்கொண்டு இருக்கிறார். அப்போ மீனா வர அவரும் செந்திலை திட்டுகிறார். எனக்கு இன்னும் பேசணும் போல இருக்கு. ஆனா இப்போ சொன்னா நல்லா இருக்காது எனத் திட்டி விட்டு செல்கிறார். ‘

கடையில் செந்தில் இருக்க அவரை ஆர்டர் முடித்த பின்னர் பேங்கிற்கு போக சொல்கிறார் பாண்டியன். ஆனால் செந்தில் தடுமாற்றத்துடன் இருக்க அவரை அருகில் இருக்கும் கதிர் கவனிக்கிறார். அவர் கேள்வி கேட்டவும் தொடங்குகிறார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *